சென்னை: 'திராவிட மாடல் ஆட்சி' என்ற வார்த்தையை, கவர்னர் குறிப்பிடுவதை தவிர்த்தார்.
அதன் விபரம்:
* பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு, மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்து சமீபத்தில் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது
* சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலையில் உள்ளோர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் நலன் காத்துள்ள, இந்த திராவிட வளர்ச்சிப் பாதையில், இந்த அரசு மேலும் உத்வேகத்தோடு தொடர்ந்து பீடு நடைபோடும்
*சமீபத்தில், 'இந்தியா டுடே' பத்திரிகை நடத்திய மாநிலங்களின் நிலை என்ற ஆய்வு, சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களில், முதன்மை மாநிலம் தமிழகம் என முடிவு செய்துள்ளது
*இந்த சாதனை நம் முதல்வரின் ஆற்றல்மிக்க தலைமைக்கும், 'திராவிட மாடல்' ஆட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நற்சான்றிதழாகும்
*மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட, அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. வன்முறை இல்லாத அமைதிப் பூங்காவாக தமிழகம் தொடர்ந்து திகழ்வதற்கு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த அம்சங்களை தன் பேச்சில் குறிப்பிடாமல், கவர்னர் தவிர்த்து விட்டார்.
அது தொடர்பாக, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: கவர்னர் உரையில், ஆட்சேபகரமான சில விஷயங்களை நீக்கும்படி கவர்னர் கூறியபோது, 'உரை அச்சுக்கு போய் விட்டது. நீங்கள் பேசுகையில், அதை தவிர்த்து பேசுங்கள்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கவர்னர் அதை நீக்கி வாசித்தார்; சில விஷயங்களை சேர்த்து வாசித்தார். அது மரபு மீறிய செயல் அல்ல.
அரசை கண்டபடி புகழும் பகுதிகளை பேசும்போது தவிர்க்கலாம் என்றதால் தவிர்த்தார். அரசின் கொள்கை மற்றும் செய்ய வேண்டியதை மட்டுமே, கவர்னர் உரையில் வைப்பர். 'அதீத புகழ்ச்சிகளை தவிர்ப்பேன்' என, கவர்னர் ஏற்கனவே சொல்லி விட்டார். மாநிலம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று கூறுவதை தவிர்த்தார். ஏனெனில், சட்டம் - ஒழுங்கு தொடர்பாக, அடுக்கடுக்கான புகார்கள் வரும்போது, அவ்வாறு கூற முடியாது என்பதால், அதை தவிர்த்தார்.
தொழில் முதலீடு குறித்த செய்தியில், மற்ற மாநிலங்களை விட அதிக அன்னிய முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்பதை, கவர்னர் மாற்றச் சொன்னார். ஏனெனில், தமிழகத்தை விட அதிகமாக மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் முதலீட்டை ஈர்த்துள்ளன. தவறான கருத்தை மாற்றச் சொன்னார். மாற்றாததால், அதை தவிர்த்தார். சபாநாயகர் இருக்கையில், கவர்னர் இருக்கும்போதே, சபை மரபை மீறி, கவர்னருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தது, மரபை மீறிய செயல்.
சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும், கவர்னரின் பேச்சை, சபைக் குறிப்பில் இருந்து நீக்குவது என்பது, சட்ட வல்லுனர்கள் முன்புள்ள தீவிர விவாதப் பொருளாகும். இவ்வாறு கவர்னர் அலுவலக வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து (14)
சபாஷ்
சிங்கம் சின்னதாக போட்ட சத்தம் பெரிசா கேட்டதால் காக்கை குஞ்சுகளின் கீச்சல் சாரி கூச்சல் கேட்காமல் போய்விட்டது.
வடிவேலு ஒரு படத்தில் சொல்வார்" அண்ணன் அடி வாங்கியதை சொல்லியே ஓட்டு வாங்கி மந்திரி ஆகி விடுவேன்" என்று. அதை போல் ஆட்சியை கலைத்தாள் அதை சொல்லியே அனுதாப ஓட்டில். மீண்டும் ஜெயித்து வருவார்கள். தமிழ் naattinmakkalai பற்றி நமக்கு தான் நன்கு தெரியுமே
தமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்? கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல் இவ்வாறு வெளியாகியுள்ளது. இந்த அம்சங்களை சுட்டிக்காட்டி இந்த தகவல் அமைந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1) கவர்னர் உரையை நீக்குகிறேன் என அவர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய அவ்வையாரின் "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், நாடு என்கிற கவிதை வரிகளையும், நாட்டுமக்களுக்கு கவர்னர் தமிழில் சொன்ன ஆங்கில புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும் நீக்கியுள்ளனர். 2) கவர்னர் உரையை ஜனவரி 6-ந் தேதி அன்று அரசு அனுப்பி வைத்தது. உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை கவர்னர் குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது அச்சுக்கு போய்விட்டது. நீங்கள் பேசும்போது தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லியுள்ளனர். (அது ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது.) ஆனால் கவர்னர் சபையில் அதை நீக்கி வாசித்தபோது உடனடியாக சேனல்களுக்கு அதை அனுப்பி வைத்தும், கவர்னர் இருக்கும்போதே கவர்னர் உரைக்குப்பின் சபை முடித்து வைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி தீர்மானம் கொண்டு வரப்பட்டு கவர்னர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். எதை கவர்னர் ஆட்சேபித்தார் ஏன் என்பதை பார்ப்போம்.
மாடல் என்ற சொல்லுக்கு தமிழிலில் சொல் இல்லையோ. model என்ற சொல்லுக்கு சரியான உச்சரிப்பு மொடல்.