Load Image
Advertisement

மதமாற்ற விவகாரத்தில் அரசியல் வேண்டாம் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Supreme Court condemns Tamil Nadu government for not politics in conversion issue    மதமாற்ற விவகாரத்தில் அரசியல் வேண்டாம் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ADVERTISEMENT


புதுடில்லி கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கில், 'அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு' என கூறிய தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 'இது முக்கியமான பிரச்னை தான். உங்கள் அரசியலை இதில் கலக்க வேண்டாம்' என, உச்ச நீதிமன்றம் கடுமையுடன் குறிப்பிட்டது.

கட்டாய மதமாற்றம் தொடர்பாக அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Latest Tamil News
'மக்களை அச்சுறுத்தியும், பரிசுகள், பணப் பலன்கள் வழங்கி ஏமாற்றியும் நடக்கும் மதம் மாற்றும் மோசடியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 'கட்டாய மதமாற்றம் என்பது மிகப் பெரும் பிரச்னையாகும். இது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம், அமர்வு கேட்டது.

அப்போது குறிக்கிட்ட தமிழக அரசு சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''இது அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு. தமிழகத்தில் இதுபோன்று கட்டாய மதமாற்றம் ஏதும் நடக்கவில்லை,'' என, குறிப்பிட்டார்.

இதற்கு அமர்வு கூறியதாவது:

நீங்கள் இவ்வாறு கொந்தளிப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். நீதிமன்றத்தை வேறொரு களமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். நாங்கள் நாடு முழுதும் உள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

கட்டாய மதமாற்றம் என்பது நிச்சயம் மிகப் பெரும் பிரச்னை தான். உங்கள் மாநிலத்தில் அந்தப் பிரச்னை இருந்தால், அது ஆபத்து; இல்லாவிட்டால் நல்லது.

உங்களை குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக எப்படி கருதுகிறீர்கள். இந்த விவகாரத்தை வீணாக அரசியலாக்க வேண்டாம்.

இவ்வாறு அமர்வு கூறியது.

வழக்கின் விசாரணை, பிப்., ௭ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (31)

  • theruvasagan -

    இதுதான் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கறது.

  • DVRR - Kolkata,இந்தியா

    இது தான் இவன் வண்டவாளம் ?????எப்போப்பா மதமாற்றம் செய்து கொண்டாய்???நீயெல்லாம் பேசுறே டாஸ்மாக்கினாட்டில் மதமாற்றம் நடக்கவில்லை

  • DVRR - Kolkata,இந்தியா

    இந்த வக்கீல் பணம் கொடுத்தால் என்ன என்ன என்ன வேண்டுமானலும் ரெடி

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    கட்டாய மத மாற்றம் என்பதே பித்தலாட்டம்.இருக்க பாதுகாப்பான இடம் சென்று மீண்டும் தங்களின் மத கோட்பாட்டை நிலை நிறுத்த முடியும் என்பது சாமாநியர்களுக்கு கூட தெரிந்து கொள்ள முடியும். நீதிபதி கவலை படுவது போல் தேச பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படப்போவதில்லை. யாரையும் கட்டாயப்படுத்த முடியும் என நினைப்பதே சுயமரியாதை கொண்ட மனித இனத்தையே கேவலப்படுத்துவது போல் ஆகும். இருக்கும் மதத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று ஆயிரம் பிரச்சனைகள் இருக்க பாதிக்கப்படுபவர்கள் உண்மையை தேடி அதனை நோக்கி விரைவார்கள். ஒரே மதத்தில் உள்ளவர்களே ஜாதி என்ற வெறுப்பில் கவ்ரவ கொலைக்கு உள்ளாகின்றார்கள்.

  • சீனி - Bangalore,இந்தியா

    ஆட்சிக்கு பிச்சை போடுறவன அடிமைகள் எதிர்த்து பேச முடியுமா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement