சென்னை: இந்தாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கிய நிலையில், கவர்னர் உரையின்போது திமுக.,வின் கூட்டணி கட்சிகள், கவர்னர் ரவிக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது கவர்னர் உரையை துவங்கும்போது, திமுக.,வின் கூட்டணி கட்சிகள் கவர்னரை பேசவிடாமல் 'கவர்னரே வெளியேறு' என்றும், 'வாழ்க வாழ்க வாழ்கவே, தமிழ்நாடு வாழ்கவே' எனவும் கோஷமிட்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் அமளிக்கு இடையே கவர்னர் தன் உரையை நிறுத்தாமல் தொடர்ந்தார்.

வெளிநடப்பு
இதனையடுத்து காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கவர்னர் ரவி 'தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரி' எனத் தெரிவித்த கருத்துக்கு திமுக.,வின் எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது உரையை 'மதிப்பிற்குரிய பேரவை தலைவர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டசபை உறுப்பினர்களே, சட்டசபை அலுவலர்களே, ஊடக நண்பர்களே, என் இனிய தமிழக சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்.
இந்த மாமன்றத்தில் 2023ம் ஆண்டிற்கான சட்டசபை முதல் கூட்டம் என் உரையை ஆற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் இனிய சகோதர, சகோதரிகளுக்கும், இந்த சபையில் உள்ள அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த புத்தாண்டில் நம் மாநிலத்தின் மகிழ்ச்சியும், வளமும், வளர்ச்சியும் மேன்மேலும் பெருக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்' என தமிழில் உரையை துவங்கினார் கவர்னர் ரவி.
இதனைத்தொடர்ந்து அவ்வையாரின் 'வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்' என்ற வரிகளையும் குறிப்பிட்டு உரையை தொடர்ந்தார்.
வாசகர் கருத்து (57)
வாழ்க தமிழ் நாடு.
ஆளுநர் எப்போது மாநில அரசை எதிர்க்க ஆரம்பித்து விட்டாரோ அப்போதே மாநில அரசின் எதிர்ப்பையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்
திமுக அடிமைகள்
பா ம க அடுத்த கூட்டணிக்கு அச்சாரம் போட்டு விட்டது.
எப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தான் ...ஆளுநர் உரையின் போது அமளி செய்வார்கள்.. ஆனால் இப்போது தான் முதல் முறையாக... ஆளும் கட்சி கூட்டணி ஆட்களே அமளி செய்கிறார்கள்.. அதிமுக மற்றும் பிஜேபி போல அவர்களுக்கும் அந்த அறிக்கையில் உள்ளவை மீது நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது