Load Image
Advertisement

ரஷ்ய போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் ஏற்க மறுப்பு

Ukraine refuses to accept Russian ceasefire announcement   ரஷ்ய போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் ஏற்க மறுப்பு
ADVERTISEMENT
கிவிவ்: ரஷ்யா அறிவித்துள்ள இரு நாட்கள் போர் நிறுத்தத்தினை ஏற்க உக்ரைன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில், ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்காக இன்றும்,நாளையும், 36 மணி நேர போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்டார்.
Latest Tamil News
உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இந்த போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.புடினின் இந்த அறிவிப்பை உக்ரைன் ஏற்க மறுத்துவிட்டது.இது தொடர்பாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறியதாவது. உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அதன் பிறகு தான் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும். ரஷ்யாவின் அறிவிப்பு ஒரு தந்திரமாகும். ரஷ்யாவின் அறிவிப்பை ஏற்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (6)

  • RK -

    ரஷ்யா இந்த போரில் தோற்கும்.

  • M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா

    இங்கு இரண்டுபேர் சேர்ந்து ஒரு கட்சியை அழித்துக்கொண்டுள்ளார்கள்

  • Anand - chennai,இந்தியா

    உக்ரைனை அழிக்காமல் விடமாட்டார்.......

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    நீங்க அமெரிக்காவின் பேச்சை கேட்டுகிட்டு ஆடுறீங்க உக்ரைன் , அது பொது மக்களுக்கு நல்லதல்ல

  • vijay - coimbatore,இந்தியா

    காமெடியன் உக்ரைன் அதிபன் தன நாட்டை முழுசா அழிக்கப்போகிறான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்