Load Image
Advertisement

தமிழக பா.ஜ., தலைவராக கவர்னர் செயல்பட வேண்டாம்: டி.ஆர்.பாலு

சென்னை:'கவர்னர் ரவி, தமிழகபா.ஜ., தலைவராக செயல்பட வேண்டாம்' என, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து, நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கவர்னர் ரவி கூறி வருகிறார்.

எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து, அவர் கூறும் கருத்துக்கள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன.

திராவிட ஆட்சியில், 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர் என, கவர்னர் ரவி பேசியுள்ளார்.

பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய் பேச வேண்டியதை, கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து, அவர் பேசுவது கடும் கண்டனத்துக்கு உரியது. இவருக்கு, தமிழக பா.ஜ., தலைவராகும் ஆசை இருந்தால், கவர்னர் பதவியை துறந்து, பின் இதுபோன்ற அபத்தங்களை பேசட்டும்.

அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அதே நேரத்தில், நியமனம் செய்யப்படும் பதவியில் அமர்ந்து, தமிழக அரசியல் லகானை செலுத்த பார்ப்பது, அரசியல் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கும் செயல்.

தமிழக பா.ஜ.,விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழகத்தில் கவர்னராக இருந்து, அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது.

இவ்வாறு டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement