Load Image
Advertisement

நடக்க முடியாமல் அவதிப்படும் மகன்: காப்பாற்ற வழியின்றி தவிக்கும் தாய்

Tamil News
ADVERTISEMENT
மயிலாடுதுறை: சீர்காழி அருகே நடக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் மகனின் கால்களை சரி செய்து நடக்க வைத்துக் காப்பாற்ற தமிழக முதல்வர் உதவி செய்ய, அவரது தாய் கோரிக்கை வைத்துஉள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா தாண்டவன்குளம், நவநீத கண்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்யாணசுந்தரம், இந்திரா. இந்த தம்பதிக்கு பால மணிகண்டன், 15; பாலச்சந்திரன், 14, என இரு மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் பால மணிகண்டன் 2014ம் ஆண்டு மரக்கிளைகளைப் பிடித்து விளையாடிய போது, கீழே விழுந்து காலில் பலத்த காயமடைந்தார். அவருக்கு சீர்காழியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை முட நீக்கியல் பிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பால மணிகண்டனுக்கு ஐந்து முறை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட காலுக்கு மற்றொரு காலில் இருந்து எலும்பு மாற்று அளித்து சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பால மணிகண்டனுக்கு குணமாகவில்லை. மாறாக இரு கால்களும் பாதிப்புக்கு உள்ளாகி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எட்டு ஆண்டுகள் தொடர் சிகிச்சை அளித்து வந்த ராஜிவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள், இனி வலி எதுவும் ஏற்பட்டால் அழைத்து வாருங்கள் என கூறி அனுப்பி விட்டனர்.கல்யாணசுந்தரம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கணவரின் மருத்துவ செலவிற்கு வீட்டை அடமானம் வைத்து செலவழித்த பணத்தை திரும்பக் கொடுத்து வீட்டை மீட்க முடியாத நிலையில் இந்திரா உள்ளார்.

மேலும், நடக்க முடியாத மகன் உள்ளிட்ட இரு மகன்களுடன் வருமானம் இன்றி அன்றாட உணவிற்கு கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பால மணிகண்டன் இரு கால்களும் பாதிக்கப்பட்டு மற்றவர் உதவியின்றி நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.இதனால் இந்திரா எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் மகனுக்கு துணையாக வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது. வறுமையிலும் மகனை காப்பாற்ற நினைத்த இந்திரா உறவினர்கள் உதவியுடன் பால மணிகண்டனை கோயம்புத்துாரில் உள்ள கங்கா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் 5 லட்சம் ரூபாய் செலவு செய்தால் இரு கால்களையும் சரி செய்து நடக்க வைத்து விட லாம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்திராவிடம் அதற்குரிய பொருளாதார வசதிகள் இல்லை. மிகவும் பரிதாபமான நிலையில் கூரை வீட்டில் மிகவும் வறுமையில் வாடும் நிலையிலும் மகனை காப்பாற்ற போராடும் இந்திரா, தமிழக முதல்வர் ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புக்கு:- 93448 61524.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up