சென்னை: ‛தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்; பொய் பரப்புரையை நாம் முறியடிக்க வேண்டும், எது உண்மை என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்' என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் வெற்றி பெற காரணமாக இருந்த எல்லோருக்கும் நன்றிகள். திட்டங்களை அதிகாரிகள், அலுவலர்கள் மட்டும் சிறப்பாக செய்துவிட முடியாது. அது மக்கள் இயக்கமாக மாற்றினால் தான் சிறப்பாக மக்களை சென்றடையும் என்று பிரதமர் மோடி கூறுவார்.

தமிழ்நாடு
தூய்மை இந்தியா திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், கொரோனா எதிர்ப்பு இப்படி எல்லாமே மக்கள் இயக்கமாக இருந்ததே வெற்றிக்கு காரணம். தமிழகத்தில் வித்தியாசமாக ஒரு அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்,
இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் தமிழ்நாடு அதை வேண்டாம் என்று சொல்கிறது. தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை நாம் முறியடிக்க வேண்டும். எது உண்மை என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் வேறு. அவரது நோக்கம் நாட்டில் உள்ள அனைவரும் குடும்பம். பாரதம் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் என்பதாகும். ஆங்கிலேயர் காலத்தில் தான் இந்தியாவில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. ஆகவே பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். காசி தமிழ் சங்கமம் என்பது தொடக்கம் தான்.
இதன் பயணம் தொடரும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாம் தான் தலைமையாக இருக்க போகிறோம். இந்தியா தான் அனைத்து நாடுகளுக்கும் தலைமையாக இருக்க போகிறது. இவ்வாறு கவர்னர் பேசினார்.
வாசகர் கருத்து (68)
பதிவுகளில் மாற்றி விடுங்கள் கவர்னர் சார்... தமிழ்நாடு முதல்வர் என்னும் பட்டம் இல்லாமல் போகட்டும்.
He seems like a Joker and Idiot. தமிழ் நாடு என்பதே சரி..
தமிழக முதல்வர் ஸ்டாலின் என்பது சரியா ச்டாலின் என்பது சரியா ???
தமிழ்நாட்டில் கலகம் செய்வதற்காகவே ஆர் என் சாரி ஆர் எஸ் எஸ் ரவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் ஏதோ ஒரு வடகிழக்கு மநிலத்திலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர் என்று கேள்வி.அதே போல் தமிழ்நட்டிலாருந்து விரட்டியடிக்கப்படுவது உறுதி.இது தமிழகமா அல்லது தமிழ்நாடா என்பதை தமிழர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள்.
சிங்களம் செய்த அனைத்தும், மறந்த்து தமிழனே துரோகி என்று இன்றைக்கு கதைவிடுகின்ற பிழைப்பு வாத ஈழத் தமிழின அரசியல் போன்றே இந்த தமிழ் நாட்டிலும் பாரதியைப் பழித்துப் பேசவும் தமிழை வைத்துப் பிழைப்பை நடாத்தவும் என்றே பலர் இருக்கின்றார்கள். திராவிடம் என்று வீம்புக்கு கூவுகின்றவர்கள் சிந்திக்க வைக்கின்ற கருத்து