நடராஜர் கோவிலில் இன்று தேர்த் திருவிழா
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த் திருவிழா இன்று (5ம் தேதி) நடக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், முக்கிய விழாவான தேர்த் திருவிழா இன்று காலை 6:00 மணியளவில் நடக்கிறது.
நாளை (6ம் தேதி) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், 4:00 மணி முதல், 6:00 மணி வரை, சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா சென்று வந்த பின், பிற்பகல் 2:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று இரவு 8:00 மணிக்கு, ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடந்தது.
நாளை (6ம் தேதி) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், 4:00 மணி முதல், 6:00 மணி வரை, சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா சென்று வந்த பின், பிற்பகல் 2:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!