சென்னை: ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் பொங்கல் பரிசு தொகுப்பு 'டோக்கன்' வினியோகத்தில் ஆளும் தி.மு.க.வினர் அத்துமீறலில் ஈடுபடுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வரும் 9ம் தேதி முதல் ரேஷன் கடைகள் வாயிலாக கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளன.
அதிருப்தி
ஒரே நேரத்தில் கார்டுதாரர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க கடைக்கு தினமும் 250 நபர் என்ற விகிதத்தில் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளன.
இதற்காக எந்த தேதி நேரம் கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய 'டோக்கன்' கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.
இந்த பணியில் ரேஷன் ஊழியர்கள் மட்டுமே ஈடுபட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 8ம் தேதி வரை டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ரேஷன் ஊழியர்களை தடுத்து கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்படும் டோக்கன் வினியோகத்தில் ஆளும் தி.மு.க.வினர் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ரேஷன் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:
உள்ளாட்சி பிரதிநிதிகளான தி.மு.க.வினரும் அவர்களின் ஆதரவாளர்களும் கார்டுதாரர்களுக்கு வழங்க எடுத்து செல்லும்டோக்கன்களை எங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக வாங்கி கொள்கின்றனர்.
மிரட்டல்
அவர்கள் வினியோகம் செய்து விடுவதாக கூறி எங்களை அனுப்பி விடுகின்றனர்.
அவர்களிடம் டோக்கன் தர மறுத்தால் மிரட்டுகின்றனர். அந்த பயத்தில் நாங்களும் வந்து விடுகிறோம்.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் ஆளும் கட்சி என்பதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர்அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில் 'டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் ஊழியர்கள் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநபரிடம் டோக்கன்களை தர கூடாது; அதை மீறி வழங்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
வாசகர் கருத்து (12)
ஸ்டாலின் ஆட்சியே டோக்கனையும் ஸ்டிக்கரையும் நம்பித்தான் நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணம் .
உயிருக்கு பயந்து யாரும் டோக்கன் வாங்க வரமாட்டார்கள் என ஆளும்கட்சி ஆட்கள் மொத்தமா ஆட்டைய போடலாம் என்ற நினைப்புதான்.. நம் நவீன விட்டலாச்சாரியா நாயகன் அண்ணாமலை ஒரு அறிக்கை விட்டா போதும், மொத்த டோக்கனும் மக்கள் கைக்கு வந்துவிடும். இன்னொரு செய்தி, பொங்கல் கரும்புகளை திராவிட எறும்புகள் இழுத்துசென்று சாப்பிட்டுக்கொண்டுள்ளனவாம், அதற்க்கும் மருந்து அடித்து விரட்ட வேண்டும். ஹாஹாஹா...
தி.மு.க.வினரும் அவர்களின் ஆதரவாளர்களும் கார்டுதாரர்களுக்கு வழங்க எடுத்து செல்லும்டோக்கன்களை எங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக வாங்கி கொள்கின்றனர்.. அவர்களிடம் டோக்கன் தர மறுத்தால் மிரட்டுகின்றனர். அந்த பயத்தில் நாங்களும் வந்து விடுகிறோம். இதுதொடர்..அதிகாரிகளிடம் புகார் அளித்தும் ஆளும் கட்சி என்பதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ...
விடிஞ்சது போ.
திமுகவினர் அரசு ஊழியர்களிடமிருந்து வலு கட்டாயமாக (மிரட்டி?) token ஐ வாங்குவார்களாம், ஆனால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களாம். கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர்அலுவலக அதிகாரியின் கூற்று அபத்தமாக இருக்கிறது.