புதுடில்லி: அமைச்சர்கள் போன்ற பொது சேவையில் ஈடுபட்டுள்ளோரின் கருத்து சுதந்திரத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'அமைச்சரின் பேச்சை, அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும், அசம் கான் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியும், அந்தப் பெண்ணின் கணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஒத்தி வைப்பு:
இதை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற, 2017ல் பரிந்துரைத்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த நவ., ௧௫ல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.
இதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒரு அமைச்சரின் பேச்சை, முழுமையாக அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. கூட்டு பொறுப்பு என்பது இருந்தபோதும், அரசை இதில் பொறுப்பாக்க முடியாது.
நம் கலாசாரம்:
கருத்து சுதந்திரம், அடிப்படை உரிமைகள் தொடர்பாக அரசியல் சாசனத்தின், ௧௯வது பிரிவில் கூறப்பட்டுள்ளவை அனைவருக்கும் பொருந்தும். இதற்கு மேலாக, அமைச்சர் போன்ற பொது சேவையில் ஈடுபட்டுள்ளோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை.
அதே நேரத்தில், நம் நாட்டில் அரசியல் சாசன கலாசாரத்தின்படி, இதுபோன்ற பொறுப்பான பதவியில் உள்ளவர்களுக்கு என சில பொறுப்புகள் உள்ளன. எந்த மதத்தினரையும், நாட்டு மக்களையும் புண்படுத்தும் வகையில் பேசக் கூடாது என்பது நம் கலாசாரம். இதன்படி செயல்பட்டாலே, சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க முடியும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
''ஒரு அமைச்சர், அமைச்சர் என்ற பொறுப்பில் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தால், அதை அரசின் கருத்தாகவே எடுத்து கொள்ள வேண்டும்,'' என மாறுபட்ட கருத்தை தெரிவித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, அதே நேரத்தில் தீர்ப்பில் உடன்படுவதாக கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (14)
சபாஷ். இனியாவது அரசியல்கட்சி உறுப்பினர்கள் கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்ப கூடாது. இவர்கள் முத்திரை தாளில் (stamp paper) affidavit with notary public கையெழுத்து போட்ட வாக்குறுதி கொடுத்தால் தான் நம்பவேண்டும். இதை நான் கேட்டு தான், எங்கள் வார்டு உறுப்பினர் தலைதெறிக்க ஓடினார்.
நீதிபதிகள் கோர்ட்டுக்கு வெளியே சொல்வதெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது.
neethi
மக்கள் பிரதி நிதிகள் ஆளும் அரசுக்கு கீழ் தான் வருவார்கள் அப்பொழுது அந்த அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்,அப்படி என்றால் தேர்தலுக்கு முன் ஓட்டுக்கள் பெறுவதற்காக சொல்லும் அனைத்தும் மக்கள் நம்ப தேவை இல்லை ஏனென்றால் அவை அனைத்தும் அவர்களின் சொந்த கருத்து அரசு பொறுப்பு ஏற்காது,கோவாலு எதோ சொல்லனுமுனு தீர்ப்பு சொல்ல கூடாது .
இதுக்ஜெல்லாம் நீட்டி முழக்கி கருத்து சொல்லுவாங்க. 2016 ல நடந்த பாலியல் கொடுமை வழக்கில் ஏதாவது தீர்ப்பு வந்துச்சான்னா பதில் இருக்காது.