Load Image
Advertisement

சிவகாசியில் 2023ம் ஆண்டிற்கான காலண்டர் விற்பனை ரூ.400 கோடி

Calendar sales for 2023 in Sivakasi is Rs.400 crores   சிவகாசியில் 2023ம் ஆண்டிற்கான காலண்டர் விற்பனை ரூ.400 கோடி
ADVERTISEMENT
சிவகாசி: சிவகாசியில் காலண்டர் 40 சதவீதம் விலை உயர்ந்த நிலையில் 2023 ஆண்டிற்கான வியாபாரம் ரூ.400 கோடிக்கு நடந்தது.

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக 300 காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டரில் 90 சதவீதம் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. கொரோனா தொற்றால் இரு ஆண்டுகள் காலண்டர் வியாபாரம் சுமாராக இருந்த நிலையில், 2023ம் ஆண்டிற்கான காலண்டர் ஆர்டர் சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது காலண்டர் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது.

இங்கு புதிய டிசைன்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வண்ண காலண்டர்கள் தயாராகி வருகின்றன.

சில்வர், கோல்டு பாயில்ஸ், எம்பாஸ் உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில், கலைநயத்துடன் கூடியதாக காலண்டர்கள் உள்ளன.

2023 க்கான காலண்டர் ஆர்டர் கொடுக்கும்போது 2022ன் மத்தியில் காலண்டரின் விலை 35 சதவீதம் மட்டுமே உயர்ந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் 40 சதவீதம் விலை உயர்ந்தது. மாத காலண்டர் 50 முதல் 55 சதவீதம் விலை உயர்ந்தது. காரணம் மூலப் பொருட்கள் விலை ஏற்றம்.
Latest Tamil News
விலை உயர்வால் இந்த ஆண்டு 15 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது. ஆனாலும் விலை உயர்வால் ரூ.400 கோடி வியாபாரம் நடந்துள்ளது. தற்போது 2023 க்கான காலண்டர்கள் 2023 ஜனவரி மாதத்தின் பாதி வரை ஆர்டர் பெறப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும். தற்போது 95 சதவீதம் விற்பனை முடிந்த நிலையில் ஜனவரி இறுதியில் ரூ.450 கோடிக்கு வியாபாரம் நடக்கும்.

காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர் கூறியதாவது: காலண்டர் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருள்களான ஆர்ட் பேப்பர் 45 சதவீதம்,

மேப் லித்தோ 55 சதவீதம், நாள்காட்டி வில்லை போஸ்டர் 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உற்பத்தி குறைந்தும், ஏற்கனவே இருந்த வியாபாரம் நடந்துள்ளது, என்றார்.


வாசகர் கருத்து (8)

  • Sriniv - India,இந்தியா

    விலை ஏற்றம் ஏற்று கொள்ள முடியாதது. வருடா வருடம் விலையை ஏற்றி வருகிறார்கள்

  • மதுமிதா -

    அரசு சார்பில் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டாத தனிக் காலண்டர் தயாரா

  • venugopal s -

    இது மட்டும் மத்திய பாஜக அரசுக்கு தெரிந்தால் திருப்பூரை அழித்தது போல சிவகாசியையும் ஒரு வழி பண்ணி விடுவார்கள்!

  • Mohan - COIMBATORE,இந்தியா

    இந்த ஒரு தொழிலை தான் விட்டு வெச்சிருந்தாங்க நீங்களே உங்க தொழிலை மன்ன அல்லி கொட்டி டீங்க ..ஏன்டா அடுத்த தடவ விடுவன விடியலு வந்திருவான் பாரு கமிஷன் கேக்குறதுக்கு ..

  • g.s,rajan - chennai ,இந்தியா

    காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போதே நம் வாழ்வில் ஒரு நாள் கழிந்த எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் உருவாகும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்