Load Image
Advertisement

கோவில்கள் நிர்வாகத்தை ஆய்வு செய்ய பறக்கும் படை



சென்னை,-கோவில் நிர்வாகம், பக்தர்களின் வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News

அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் சுற்றறிக்கை:

அறநிலையத் துறை சட்டத்தின் படி, கோவில்களின் அசையும், அசையா சொத்துக்கள், ஆவணங்கள், கோப்புகள், திட்டங்கள், வரவு - செலவினங்களை, கமிஷனர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நான்கு துணை கலெக்டர்கள் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அறநிலையத் துறையின், 20 மண்டலங்களிலும் ஆய்வு செய்து, கமிஷனருக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
Latest Tamil News
இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் மற்றும் பணியாளர் வருகை பதிவேடு, கோவில் துாய்மை, பக்தர்களின் அடிப்படை வசதிகள், வரவு - செலவினங்கள், கட்டணச் சீட்டுக்கள் விற்பனை, அன்னதான திட்டம் உள்ளிட்ட, 18 விஷயங்களை ஆய்வு செய்வர்.

அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (15)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    ஏற்கனவே உதவி கமிஷனர் இணை உதவி கமிஷனர் என்று பல நூறுபேர் இந்த வரிசையில் கோயில்களின் வருவாய் செலவை கண்காணித்து வரும்போது இந்த கூடுதல் படை எதற்கு? வீணான செலவு மட்றவர்கள்மீது பழிபோட திட்டமிட்டுள்ள திட்டம் இது. இவர்கள் அனைவருக்கு பிறகு ஒரு கார் - டிரைவர் - பெட்ரோல் இவைகள் எல்லாம் வீண் செலவு. கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு சம்பளம் கூடுதலாக கொடுக்க மனசே வரவில்லை இந்த திராவிட அரசுக்கு

  • C.SRIRAM - CHENNAI,இந்தியா

    எதில் பறந்து வருவார்கள் ?. வேலையை பாருங்க .கோவில்கள் அறநிலையத்துறையின் சொந்த சொத்துகள் அல்ல . நிர்வாக அமைப்பு மட்டுமே . உங்க வீரத்தை மற்ற வழிபாட்டு தளங்களிலும் காட்டலாமே ?. வெட்டி அமைப்பு .

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    அறம் இல்லாத இந்த துறை பறக்கும் படை அமைத்து அதன் வழியாக என்ன சாதிக்கப் போகிறார். இந்து கோவிலின் உண்டியல் பணத்தை எடுத்து பரங்கிமலை தேவாலயம் மற்றும் மசூதிகளை புனரமைக்க கோடிக்கணக்கில் வாரி வழங்க ஒரு அரசு துறை அவசியமா.

  • SENTHIL - tirumalai,இந்தியா

    தமிழ் நாட்டிலில் ஊழல் அதிகம் உள்ள துறை இந்த அறமற்ற நிலைய துறை... இந்து ஏமாளி இளிச்சவாயன்கள் முழு சப்போர்ட், கடவுளும் கண்ணை மூடிகொண்டு இருக்கிறார்.

  • Anandan P - Chennai,இந்தியா

    இந்த சமுதாயத்தில் பல சமூகத்தினர் வாசிக்கியின்றனர் , ஏன் இந்துத்து கோயிலுளுக்கு மட்டும் இந்த பறக்கும் படை , ஏன் மற்ற சமூகத்தினருக்கு ஏன் இது போன்ற பறக்கும் படை கிடையாதா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்