Load Image
Advertisement

நிலக்கரி பயன்படுத்த புதுடில்லியில் தடை

புதுடில்லி-புதுடில்லி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுற்றுச் சூழல் மாசை குறைக்கும் வகையில், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலக்கரி எரிபொருள்களை பயன்படுத்துவதற்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
Latest Tamil News

புதுடில்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான குருகிராம், நொய்டா, பரிதாபாத், காசியாபாத் பகுதிகளில் விவசாய கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துள்ளது.

மூத்த குடிமக்கள், குழந்தைகளுக்கு சுவாச பிரச்னைகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

புதுடில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக பல ஆயிரம் கிலோ நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதனாலும் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்த பகுதிகளில் தொழில்துறை மற்றும் இதர பயன்பாடுகளில் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய, மத்திய அரசின் தர நிர்ணய மேலாண்மை ஆணையம் முடிவு செய்தது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
Latest Tamil News
இதன்படி உடல்களை தகனம் செய்வதற்கும், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சமைப்பதற்கும் மரம் அல்லது மூங்கில் விறகை பயன்படுத்தலாம்.

துணிகளை இஸ்திரி செய்ய மரக் கரியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத எரிபொருட்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், அவற்றை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் பல தொழிற்சாலைகளில் நிலக்கரியை வைத்துதான் மின்சாரம் தயாரிக்கின்றனர், தொழிற்சாலைகளை நடத்துகின்றனர், அவற்றையும் மூடிவிடலாமா? அதானி என்ன ஆவார் யோசித்தீர்களா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்