தனித்து போட்டியிட தயாரா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

அவரது அறிக்கை:
கடந்த, 1967ல் தி.மு.க., முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது, அதன் சொந்த பலத்தில் அல்ல; சுதந்திரா கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கூட்டணி காரணமாக தான். 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தனி பலத்தால் அல்ல. அக்கட்சி, 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே.
யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள், முதல்வர் ஸ்டாலின். துணை பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகி விட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2024 லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., மாபெரும் வெற்றி பெறும்.
தமிழக பா.ஜ., கடந்த காலங்களில் தனித்து போட்டியிட்டது உண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்ய தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். கூட்டணி இல்லாமல் போட்டியிட, தி.மு.க., தயாரா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் மற்றொரு அறிக்கை:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆண்டுதோறும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், 2025 - 26க்கு முன் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு பணியில், 3.50 லட்சம் இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் - 4' தேர்வு தாமதமாகி, 2022 ஜூலையில் நடந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன் நடத்தப்பட்ட 'குரூப் - 4' தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு, இன்று வரை பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிக்கிறது, திறனற்ற, தி.மு.க., அரசு.
இதற்கு மேலும் தாமதிக்காமல், இம்மாதம் தேர்வு முடிவுகளை வெளியிட, அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (69)
கூட்டணி வைத்து போட்டியிட்டு தனித்து ஆட்சி அமைப்போம். கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் பதவி - கூட்டணி கட்சிகளுக்கி இதயத்தில் பதவி - இதுதான் திராவிட மாடல் -
இப்படியே வீர வசனம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அப்புறம் தேர்தல் சமயத்தில் அண்ணாமலை அதிமுகவின் முந்தானைக்கு பின்னால் போய் ஒளிந்து கொள்வார்!
தனித்து போட்டியிட தயாரா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்.இதுவரை நடந்த தேர்தல்களில் திமுக தனித்து போட்டியிட்டதே இல்லை .அப்படியிருந்தும் ஸ்டாலின் அவர்கள் இந்த வாதத்தை வைப்பது ஏன் ? வெரி சிம்பிள் .எல்லாம் திராவிட சார்பு ஊடகங்களை நம்பித்தான் -ஆம் ஸ்டாலின் பிஜேபியை தனித்து போட்டியிட தயாரா ? என்று கேட்டதை பிஜேபிக்கு ஸ்டாலின் வைத்த செக் - தடுமாறும் காவி கூட்டம் - ஸ்டாலினின் சாணக்கியதனம் - மனுநீதிதர்ம பிஜேபி மண்டியிட போகும் நாள் விரைவில் - ஆரியஎதிர்ப்பு ஸ்டாலினின் சனாதனதர்மநீதிக்கு எதிரான போர் துவங்கியது - சமூக நீதி காவலர் ஸ்டாலினின் சவாலை ஏற்க முடியாமல் வருணாசிரம நீதி பேசும் ஆரிய பிஜேபி அரசு திணறல் - திராவிட ஸ்டாலினின் தேர்தல் வியூகம் -ஆர் எஸ் எஸ் ஆதரவு மதவாத பிஜேபி எதிர்கொள்ள முடியாமல் தவிப்பு - இப்படியெல்லாம் இட்டு கட்டி இட்டு கட்டி ,பேசிட சார்பு ஊடகங்களும் ,விவாத மேடைகளும் இருக்க ஸ்டாலின் அவர்கள் இப்படி பலமுறை பேசுவார் .ஆனால் உண்மை என்பதை தமிழக மக்கள் அறிவார்கள் .
திமுக , அதிமுக இரண்டும் சம பலமுள்ள கட்சிகள் இதில் யார் சிறந்த கூட்டணி அமைக்கிறார்களோ அவர்களே வெற்றிபெறுகிறார்கள்
தலைவரே...அண்ணாமலை உசுப்பேத்துகிறார் என்பதற்காக தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தயார் என்று சொல்லி விடாதீர்கள்.. ஏற்கெனவே 12 கட்சி கூட்டணி இருந்தும் R K நகர் தேர்தலில் டெபாசிட் பறிபோய் விட்டது...அது தான் நம்ம கட்சியின் உண்மையான பலம் ....அதனால் கூட்டத்தோடு கோவிந்தா போடுவது தான் நமக்கு நல்லது