ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நாக்பூர்:ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தை வெடி குண்டு வைத்து தகர்க்கப்போவதாக வந்த தகவலை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது.நாக்பூரின் போலீஸ் நிலையத்திற்கு நண்பகல் ஒரு மணி அளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
தொடரந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அழைப்பு வந்த போன் நம்பரை கொண்டு மர்ம நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி கோரக் பாம்ரே கூறுகையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள் மற்றும் அதனை செயலிழக்கும் படை , நாய் படை உள்ளிட்டவற்றை வரவழைத்து ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் முழுவதும் சோதனை இடப்பட்டது. இருப்பினும் சந்தேகத்திற்குறிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

தொடரந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அழைப்பு வந்த போன் நம்பரை கொண்டு மர்ம நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!