ADVERTISEMENT
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் தில்லைக் குமார், இவர் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகள் அதிகாலை 3 மணிக்கு திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது.
இந்த வெடி விபத்தில் வீடு முழுவதும் தரைமட்டமாகி உள்ளது. அந்த வீட்டிற்கு அருகே வசித்து வந்த மூதாட்டி பெரியக்காள் (73) உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை யினர் விரைந்துள்ளனர். நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ், மோகனூர் வட்டாச்சியர் ஜானகி, மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இவர் கம்பெனி ஆள்.....எனவே இழப்பிற்கு கிடைக்குமா