Load Image
Advertisement

கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: படுகாயங்களுடன் சிகிச்சை

Cricketer Rishabh Pant in car accident: Treated for serious injuries   கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: படுகாயங்களுடன் சிகிச்சை
ADVERTISEMENT
ரூர்க்கி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகண்டில் இருந்து டில்லிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ரூர்க்கி அருகே அவரது கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதியதில் கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு தேஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் சம்பவ இடத்துக்கு வந்தார். ரிஷப் பண்ட் காரை ஓட்டிச் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிசிசிஐ அறிக்கை



பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சக்ஷாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பன்ட் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்க ஏற்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நெற்றியில் இரண்டு இடுங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது தற்போது, டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு பன்ட் மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் மேற்கொள்ளப்படும். பின்னரே சிகிச்சை குறித்த முடிவுகள் எடுக்கப்படும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழு உடன் பிசிசிஐ மருத்துவ குழு தொடர்ந்து, தொடர்பில் உள்ளது. இக்கட்டான சூழலில் இருந்து பன்ட் மீண்டு வருவதற்கு பிசிசிஐ பக்கபலமாக இருக்கும் எனக்கூறியுள்ளது.


@1brLatest Tamil News
விபத்தில் சிக்கிய பன்ட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய பஸ் டிரைவர் சுஷில் மன் என்பவர் கூறுகையில், பன்ட் வந்த கார், எதிர்திசையில் அதிவேகமாக வந்து, சாலை தடுப்பான் மீது மோதியது. இதனை பார்த்ததும், நான் வந்த பஸ்சை ஓரத்தில் நிறுத்திவிட்டு, கார் நோக்கி ஓடினேன். பன்ட் கார் கதவில் பாதி வெளியே வந்து விழுந்து கிடந்தார். அப்போது, அவர் தான் கிரிக்கெட் வீரர் எனவும், தனது தாயாரை அழைக்கும்படியும் கூறினார். ஆனால், அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டு கிடந்தது. நான் கிரிக்கெட் பார்த்தது இல்லை. இதனால், அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால், பஸ்சில் இருந்தவர்கள் பன்ட்டை அடையாளம் கண்டு கொண்டனர். காரில் இருந்து வெளியேற்றியதும், அதில்வேறு யாரும் உள்ளனரா என பார்த்தேன். யாரும் இல்லை. காரில் இருந்த பணத்தை எடுத்து ஆம்புலன்சில் இருந்த பன்ட்டிடம் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (5)

  • அப்புசாமி -

    உலகத்தரத்தில் சாலைகள் அமைத்துள்ளனர்.

  • அப்புசாமி -

    சரி... மனுஷனை ஊதச் சொல்லி டெஸ்ட் எடுத்தாங்களா? பெரிய மனுஷங்களுக்கு அந்த டெஸ்டெல்லாம் கிடையாதா?

  • ponssasi - chennai,இந்தியா

    அதிவேகத்தில் கார் வந்ததாக பஸ் டிரைவர் கூறுகிறார், கார் சேதமடைந்ததை பார்த்தல் மிக ஆபத்தான வேகத்தில் வந்திருப்பது தெரிகிறது. அப்படி என்ன அவசரம் என்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்வதே வேகம்தான் இருப்பினும் வாகனத்தை கட்டுப்படுத்திவிடலாம் உயிருக்கு ஆபத்திருக்காது. இன்றய தலைமுறை அனைத்திலும் அதிவேகம்.

  • NALAM VIRUMBI - Madurai,இந்தியா

    Bad time, Pant. Nation needs you. Get well soon. We are praying for your quick recovery. God bless you.

  • சீனி - Bangalore,இந்தியா

    சில மாதங்களுக்கு முன் வளர்ந்து வந்த இளம் தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி இப்படி தடுப்பில் மோதி இறந்துவிட்டார். திடீர் என வளைவுகளில் வரும், சாலைகளில் தடுப்புகளில் சரியான விளக்குகள், அல்லது சிவப்பு பட்டை காண்பதில்லை, முக்கிய காரணம் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை. சாலைகளை வீடியொ எடுத்து அலுவலகத்தில் போட்டு பார்த்து பாதுகாப்பை சரி பார்த்து, சாலை விளக்குகள், சிக்னல்கள், தடுப்பு, வளைவு குறியீடுகளை, சரி செய்யலாம், அந்த அளவுக்கு மூளை இருந்தால் அமெரிக்கா சென்று விடுவார்கள். பெரிய ஆட்கள் டிரைவர் வைத்துக்கொள்வது நலம், ரிஷ்ப் பாண்டே காரை பார்த்தால் உயிர் தப்பியதே அதிசயம் போல இருக்கு. விரைவில் முழு குணமடைந்து மீண்டு சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement