மதுரை: 'மதுரை விமான நிலையத்தில், ஹிந்தியில் பேசிய பாதுகாப்பு அதிகாரிகள், என் பெற்றோரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்' என, நடிகர் சித்தார்த், இல்லாத ஒன்றை இட்டுக் கட்டிப் பேசியது, ஒரே நாளில் வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக, மதுரை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: மதுரை விமான நிலையத்திற்கு அவரது குடும்பத்தினர், 10 பேர் வந்தனர். அவர்கள் கூறுவது போல, 20 நிமிடங்கள் அவர்களை காத்திருக்க செய்யவில்லை. அவர்கள் அனைவருக்கும், ஒன்பது நிமிடங்களில் 'செக்கிங்' முடிந்து விட்டது. சோதனை நேரத்தில் அவர்களிடம் பேசியது, தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் அதிகாரி தான். அந்த இடத்தில் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி தெரிந்தவர்கள் உட்பட ஐந்து பேர் இருந்தனர். இதில் அப்பெண் அதிகாரி மட்டுமே, அவர்களிடம் தமிழில் பேசினார்.

சித்தார்த் முக கவசத்தை அகற்றிய பின், அவரை அடையாளம் கண்ட போது, 15 நொடிகள் பேசினார். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என, பல மொழிகளில் பேசினர். அவரது குடும்பத்தினர் தெலுங்கில் பேசியபோது, அருகில் தெலுங்கு மொழி தெரிந்த எஸ்.ஐ., ஒருவர் தெலுங்கில் பதில் கூறினார். அவர்கள் கொண்டு வந்த பையில் நாணயங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்ததால் அதற்கு கீழே இருக்கும் பொருட்கள் எதுவும் 'எக்ஸ்ரே'யில் தெரியாது. எனவே, வழக்கமான நடைமுறைப்படி அதை 'டிரே'யில் எடுத்து வைக்கும்படி கூறி 'ஸ்கேன்' செய்தனர்.
அப்போது, 'எங்களுடன் பாதுகாவலர் வரவில்லை என்பதால், எங்களை 'வச்சி' செய்கிறீர்களா?' என தமிழில் சித்தார்த் கேட்டார். அதற்கு 'இது, எங்கள் நடைமுறை. இதில் எங்களை குற்றம் சொல்லாதீர்கள்' என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அவர், 'பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். ஒருபோதும் ஹிந்தி மொழி குறித்து அவர் எங்களிடம் கேட்கவில்லை; நாங்களும் மொழி பற்றி பேசவில்லை. பரிசோதனை முடிந்து சென்றவர், திரும்ப வந்து எங்களை போட்டோ எடுத்துச் சென்றார்.

மதுரை விமான நிலையத்தில் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காகவே, பயணியரிடம் கலந்துரையாடும் வாய்ப்புள்ள எல்லா பகுதிகளிலும், தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரை நியமித்துள்ளோம். எனவே, இதுபோன்ற பிரச்னை இதுவரை எழவில்லை. சம்பவம் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது, நடந்தபோது சில விமான நிறுவன ஊழியர்களும் அப்பகுதியில் இருந்தனர். இதுகுறித்து உயரதிகாரிகளிடமும் விளக்கமளித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்கு ஹிந்தி தெரியும். சினிமாவில் அதிக வாய்ப்பில்லாததால், அவ்வப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து, 'பப்ளிசிட்டி' தேடிக் கொள்வார். இவ்வகையில், மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள், ஹிந்தியில் பேசி 'டார்ச்சர்' செய்ததாக சித்தார்த் கூறியது பொய் என்பது, 'சிசிடிவி' கேமராவால் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. 'கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாட்கள் தாங்கும்' என்பர். ஆனால் சித்தார்த்துக்கோ, மறுநாளே தெரிந்துவிட்டது. இதற்கிடையே, சித்தார்த் ஹிந்தியில் பேட்டி அளிக்கும் வீடியோவை வெளியிட்டு 'நெட்டிசன்'கள் அவரை, சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில் குமாரிடம் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சோலை கண்ணன் மனு அளித்தார். அதில், ‛அமைதியான தமிழ் மக்களிடம் தனது சுயலாபத்திற்காக மொழி உணர்ச்சியை வேண்டுமென்றே திட்டமிட்டு தூண்டிவிடும் வகையிலும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை மிரட்டும் வகையிலும் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் வகையிலும், உண்மைக்கு மாறான கருத்துகளை பரப்பிய சித்தார்த் மீதும், குடும்பத்தினர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (97)
கெட்டிக்காரனுக்கு தான் எட்டு நாள். இவனது கூட்டு ஒரே நாளில் உடைந்ததால் இவன் அரை வேக்காடு. தீவிர போலீஸ் நடவடிக்கை தேவை
வேலை இல்லாத சிகை அழகூட்டுபவன் பொழுது போகாமல் பூனை கேசத்தை மழித்தானாம் என்கிற பண்டைய கால வசனம் சித்தார்த்துக்கு கச்சிதமாக பொருந்தும்
தம்பி சித்தார்த்தூ - திருநெல்வேலி பக்கம் போயிராதே - வாயி பேசாது வேற ஒன்னு தான் பேசும்
அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என, பல மொழிகளில் பேசினர்.தெலுங்குகாரங்க எல்லாருக்கும் தமிழ் பாசம் ஜாஸ்தியா இருக்கு
இதெல்லாம் ஒரு பொழப்பா