ADVERTISEMENT
சாவ் பாலோ: பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே, 82. புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மூன்று முறை உலக கோப்பை (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
உடனடியாக ஆப்பரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்டது. பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பீலே, சமீபத்தில் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 'கேன்சர்' சிகிக்கைக்காக இவருக்கு 'கீமோதெரபி' சிகிச்சை தரப்பட்டது. பின் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
மூன்று முறை உலக கோப்பை (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற 'ஆப்பரேஷன்' செய்த போது , பெருங்குடலின் வலது பக்கத்தில் 'கேன்சர்' கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

உடனடியாக ஆப்பரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்டது. பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பீலே, சமீபத்தில் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 'கேன்சர்' சிகிக்கைக்காக இவருக்கு 'கீமோதெரபி' சிகிச்சை தரப்பட்டது. பின் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
வாசகர் கருத்து (7)
கால்பந்து உலகத்தின் கருப்பு முத்து. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
"Black Pearl" கருப்பு முத்து என்று அழைக்க பட்ட ஜாம்பவான். இவர் காலுக்கு பந்து வந்தால், பந்து காந்தம் ஒட்டிக்கொள்வது மாதிரி ஒட்டிக்கொள்ளும். அவ்வளவு எளிதில் பந்து இவர் காலை விட்டு போகாது. அவ்வளவு திறமையான பந்து ஆட்டக்காரர். RIP
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னார் ஆத்மா எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏
கால்பந்து உலக ஜாம்பவான் பீலே மரணம் விளையாட்டு உலகிற்கு பேரிழப்பு. சாதனைகள் பல படைத்து இளைய விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த, என்றும் திகழப்போகும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பிரேசில் இந்தமுறை உலகக் கோப்பையை வென்றிருந்தால் நிம்மதியாக இறந்திருப்பார். நோய்ப் பந்தை எதிர்க்க முடியாமல் சென்றுவிட்டார். ஆழ்ந்த அனுதாபங்கள்.