திமுக ஆட்சியில் நெசவாளர் வஞ்சிக்கப்படுகிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: விவசாயிகளை தொடர்ந்து நெசவாளர்களும் திமுக ஆட்சியில் வஞ்சிக்கப்படுகிறார்கள் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கலுக்கு இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்கி, நெசவாளர்களை வஞ்சிக்க எண்ணுகிறது தி.மு.க அரசு, இதற்கு வழங்கப்பட்ட ரூ.487 கோடி 92 லட்சத்தை வெளிமாநில தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டால், அதைப் பார்த்துக்கொண்டு பா.ஜ., சும்மா இருக்காது.
ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, முந்தைய ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றையும் கிடப்பில் போடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது திமுக அரசு. வரும் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த திமுக தற்போது இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்க நினைக்கிறது.

ஏழை எளிய மக்களும், நெசவாளப் பெருமக்களும் பலன் பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், திமுகவுக்கு ஆதரவான தனியார் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் வகையில் திமுக அரசு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (14)
அண்ணாமலை தனி மனிதனாய் திமுக செய்யும் ஒவ்வொரு செயலையும் தட்டிக் கேட்கும் மிகவும் நேர்மையான மனிதனாய் அண்ணாமலை திகழ்கிறார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி முகமாய் திகழ வேண்டும் வரும் ஒவ்வொரு வேட்பாளரும் லஞ்சம் ஊழல் இல்லாமல் நேர்மையாக ஆட்சி நடைபெறும்
தினம் ஒரு பொய் சொல்லி விளம்பரம் தேடும் அண்ணாமலைக்கு ஒரு விஷயம் எதையும் ஆதாரத்தோடு சொல்வது என்பது உங்கள் அகராதியில் கிடையாதா? முதல்வர் ஐந்தாயிரம் கோடியில் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளார் என்று சொன்னீர்களே, ஆதாரம் கேட்டோம் , இதுவரை வரவில்லை, உங்கள் வார்த்தை உண்மையானால் கோர்ட்டுக்கு போலாமே ? ஏன் போகவில்லை ? E.D., C.B.I., I.T. இன்னும் ஏகப்பட்ட துறைகளை வைத்திருக்கும் பி.ஜே.பி.ஓன்ரும் செய்யலை ஏன் ? அதனால்தான் ஒருவரும் உங்கள் வார்த்தைகளை மதிப்பதில்லை, பதில் கொடுப்பதில்லை, பாவம் பி.ஜே.பி யை ஒரு வழி பண்ணுவதற்கு வேற ஆள் தேவை இல்லை .
தெறியலையா
பாஞ்சி லட்சம் போடுற திட்டம் எவ்வளவு உன்னதமான மக்களுக்கு பயனளிக்கும் திட்டம். அதே கெடப்பில் இருக்கு.
அண்ணாமலை தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சியை தருவார் நம்புகிறோம் கடவுளை வேண்டுகிறேன்