Load Image
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு: தமிழக அரசு முடிவு

சென்னை: விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறுவித்துள்ளது.


Latest Tamil News


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை வரும் ஜனவரி 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைப்பார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி ஜன.,3- ஜன.,8 ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest Tamil News

தமிழக பா.ஜ., மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (26)

  • Mohan - Thanjavur ,இந்தியா

    கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு. அப்போ, பஞ்சாப் விவசாயிகளுக்காக பச்சரிசியா. இனி, மஞ்சள்,ஏலக்காய்,முந்திரி,திராட்சை பயிரிடும் விவசாயிகள் தனித்தனியாக போராடனும் போல.இதுதான் பகுத்து அறிந்து எடுத்தமுடிவு.

  • rasaa - atlanta,யூ.எஸ்.ஏ

    மீண்டும் மீண்டும் தவறு செய்து பின் போராட்டத்துக்கு பிறகு மறு அறிவிப்பு செய்வது அரசுக்கு நல்லதல்ல. திராவிட மாடலில் இதுவும் ஒன்றோ

  • சி சொர்ணரதி -

    பா ஜ க மற்றும் விவசாயிகள் போராடியதற்கு கிடைத்த வெற்றி.

  • மதுமிதா -

    விவசாயிகள் வாழ்வு இனிக்கும்

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    சரியான திட்டமிடல் அரசுப்பணியில் இல்லாமலே போயிற்று. மகனுக்கு பதவி கொடுக்க செய்த் ஏற்பாட்டில் சிறு சிரத்தையை இதில் காட்டியிருப்பின் பாஜக போன்ற கட்சிகளின் போராட்டத்தை தவிர்த்திருக்கலாம். ஒரு அமைச்சருக்கு கூட கூடவா இதுபற்றி ஆலோசனை சொல்ல தெரியல. எவ்வளவு ஏக்கர் பயிரிட்டிருந்தார்கள். கோர்ட்டின் படியேறி பின்னர்தான் இந்த அரசுக்கு பயம் வந்துச்சுபோல. இதெல்லாம் சரியில்லைங்க. கரும்பு விநியோகம் எப்படி செய்யப்போறாங்களோ. ஒரே ஒரு திட்டத்தையாவது மிக சரியாக மக்கள் பாராட்டும் விதமாக செய்திருக்கீங்களா....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement