பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குஜராத் மாநிலம் காந்திநகரின் ரைசன் பகுதியில் வசித்துவரும் தனது தாயார் ஹீரா பென்னை சந்தித்து, குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஆசி பெற்றார். பின்னர், குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென், சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து ஓட்டளித்து சென்றார்.

இந்த நிலையில் ஹீரா பென் ஆமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹீரா பென்னின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
தாயாரின் நலம் விசாரிக்க பிரதமர் மோடி விமானம் மூலம் ஆமதாபாத் வந்தடைந்தார். தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
ராகுல் ஆறுதல்
காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு எல்லையற்றது மற்றும் விலைமதிப்பற்றது. மோடி அவர்களே, இந்த கடினமான நேரத்தில் எனது அன்பும் ஆதரவும் உங்களுடனே இருக்கிறது. உங்கள் தாயார் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட பலரும் , மோடியின் தாயார் நலமடைய வேண்டும் என வாழ்த்தி உள்ளனர்.
வாசகர் கருத்து (21)
பூரணமாக குணமாக பிரார்த்தனைகள்.
இவரது சகோதரர் ஒரு கார் விபத்தில் சிக்கி தப்பித்தார்.இப்போது இவரது அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை.இவர்கள் விரைவில் குணமடைய கடவுளை மனதார பிரார்த்திப்போம்.
எங்கள் தாய்நாட்டை கட்டி காக்க...ஒரு தலைமகனை பெற்று தந்த தாய் ....நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
மோடியின் தாயார் பூரண குணமடைந்து நீண்ட ஆயுள் பெற வேண்டும்!
ஒரு உன்னத தலைவரை உலகிற்கு தந்த அன்னை குணமடைய இறைவநை வேண்டுகிறேன்.