சென்னையில் இந்திய வரலாற்றுப் பேரவையின் 81வது மாநாடு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: நம்மை நாமே படிப்பதன் மூலம்தான் எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
மதங்களிடையே பிரிவினையை தூண்டும் சக்திகளை கட்டுப்படுத்த வேண்டும். மதசார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். பொய் வரலாறுகளை புறந்தள்ளி, மக்களை மையப்படுத்தி வரலாறு எழுதப்பட வேண்டும். அறிவியல் அடிப்படையில்தான் வரலாற்று பெருமையை பேசுகிறோம்.
கற்பனைக் கதைகளை வரலாறுகளாக சிலர் கூறுவதை ஏற்கக் கூடாது. இவ்வகையான வரலாற்று திரிபுதான் நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்தாகும். அறிவியல் பரா்வையை உருவாக்குவதுதான் இன்றைய காலத்தின் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (32)
பணம் பெற்று ஜெயித்தவர்களுக்கு வெற்றி வரலாறு இல்லை சுதந்திர விடுதலை தந்த தியாகிகள் நம் நாட்டின் வரலாறு
இன்னும் நூராண்டுகள் கழித்து கருணாநிதியைப்பற்றி யாராவது கூறினால் அது வரலாரா இல்லை கற்பனையா நாங்கள் நம்பும் ராமர். கிருஷ்ணர் அனைவரும் எங்களது முன்னோர்கள் என்பது எங்களுக்கு தெரியும் அது கற்பனை அல்ல ஆனால் கலைரசனையே இல்லாமல் பெண்களின் ஆக்கங்களைப் பற்றி மட்டும் வர்ணனை செய்யும் கலைஞர்களால் எழுதப்பட்டதல்ல ராமாயணமும். மஹாபாரதமும் என்பதை அறிந்து கொள்ளவும்
எப்படி இவ்வளவு தைரியமாக அவரது மதத்தின் பைபிள், குர் ஆன் போன்றவற்றை கற்பனைக் கதை என்று இவரால் சொல்ல முடிந்தது. வர வர தைரியம் அதிகம் ஆகி விட்டது போலும்.
ஹிந்து மத புராணங்கள் ராமாயணம் மகாபாரதம், இயேசு கிறிஸ்து பிறப்பு இறந்த பின் உயிர் பெற்று எழுந்தது இஸ்லாமிய புராணங்கள் எல்லாமே ஆதாரமில்லாத கற்பனைக் கதைகள் தான்.அவற்றை வரலாறு என்று நம்புவது மூட நம்பிக்கை!
கோயில் கட்டிய ராஜராஜ சோழன் வரலாறுகோயில் சென்றால் பதவி போகும் என்பது பயம் கலந்த கற்பனை