பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை நெருங்கியது
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கியது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 3.2 மி.மீ., தேக்கடியில் 9.2 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 296 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 141.80 அடியாக உயர்ந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 7612 மில்லியன் கன அடியாகும்.
அணையில் நீர் தேக்க கால அட்டவணையான 'ரூல்கர்வ்' விதிமுறைப்படி மார்ச் 31 வரை 142 அடி தேக்கலாம். நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இரவு கன மழை பெய்தால் 142 அடியை எட்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!