புதுடில்லி: ஐசிஐசிஐ வங்கிக்கடன் மோசடி வழக்கில் ஏற்கனவே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சாரை கைது செய்த சிபிஐ, இன்று (டிச.,26) வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வேணுகோபால் தூத்தை கைது செய்தது.
இதில், தொழிலதிபரான அவரது கணவர் தீபக் கோச்சார் பலனடைந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 2018ல் விசாரணை நடத்தியது. குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து சந்தா கோச்சார், 2018ல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த முறைகேடு தொடர்பாக சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இவர்களின் ரூ.78 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.
இந்நிலையில், இந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பியும் இருவரும் ஒத்துழைக்காததால், டிச.,24ல் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது.
வாசகர் கருத்து (6)
வங்கிக்கு தலைவராக நியமித்த காங்கிரஸ் + திமுக கூட்டணி அரசைத்தான் குற்றம் சொல்லவேண்டும்.
நாட்டில் தினந்தோறும் சாப்பாட்டிற்காக பல கோடி மக்கள் நாயாக உழைத்துக்கொண்டிருக்கும்போது இது போன்ற ஊழல் செய்தவர்களை உடனடி விசாரணை செய்து சாகும்வரை தூக்கிலிடுபட வேண்டும். அய்யகோ இந்தியா ஒரு ஜனநாயக நாடாக போயி விட்டதே. இங்கு எந்த குற்றங்களுக்கும் தண்டனை கிடையாது. சட்டங்கள் மற்றும் தண்டனைகள் எல்லாம் உச்சா நீதிமன்றத்தில் புத்தக வடிவில் மட்டுமே உள்ளது என்கிற கேடு கெட்ட நிலைமை இந்தியாவில் உள்ளது என்பதே கசப்பான உண்மை.
அது சரி, இவங்களுக்கு கடன் கொடுக்க சொன்ன படித்த அயோக்கியனை எப்போ தண்டிக்க போறாங்க, அவன் போற இடமெல்லாம் தான் செய்த குற்றங்கள் ஊழல்களை மறைக்க குறைத்து கொண்டே இருக்கானே.
இதனால் என்ன பயன்? பணம் எப்படி வரப்போகிறது என்று பார்க்க வேண்டும் - கோசரின் அணைத்து சொத்துக்களையும் பரிமுதல் செய்ய வேண்டும்
பெரு முதலைகளை காக்க, மக்களிடம் மறைக்க இப்படி அடித்த பாம்பையே அடித்துக்கொண்டுள்ளனர் .