Load Image
Advertisement

பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு தயார்! திருமாவளவன் திடீர் பேச்சு ஏன்?

Ready for alliance with BJP! Why Thirumavalavans sudden speech?  பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு தயார்! திருமாவளவன் திடீர் பேச்சு ஏன்?
ADVERTISEMENT
சென்னை: 'தமிழகத்தில் பா.ஜ.,வுக்கான ஆதரவு அதிகரித்து வருவதால், அதை மடை மாற்றுவதற்காகவே, பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க தயார்' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில், சில தினங்களுக்கு முன் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், திருமாவளவன் பேசியதாவது: மதத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு, அரசியல் கட்சிகளுடன் தொடர்பு இருக்காது. அவர்கள் யார் மீதும் பகை வைத்து கொள்ள மாட்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., உள்ளிட்ட அமைப்புகள், தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக; தாங்கள் விரும்பும் சமூகத்தை கட்டமைப்பதற்காக; ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காக, மதங்களுக்கு இடையே வெறுப்பை வளர்க்கின்றன. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

ஆனால், பா.ஜ.,வை விமர்சித்தால், ஹிந்து மதத்தை விமர்சிப்பதாக திசை திருப்பி விடுகின்றனர். விடுதலை சிறுத்தைகளிலும், 80 சதவீதம் ஹிந்துக்கள் தான் இருக்கின்றனர். பா.ஜ.,வினர் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டால், சமத்துவத்தை பேசினால், அவர்களுடன் கைகோர்க்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
Latest Tamil News ஆளும் கட்சியான தி.மு.க.,வும், காங்., உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வை விட்டு விட்டு, பா.ஜ.,வை தான் கடுமையாக விமர்சிக்கின்றன. அதற்கேற்ப, தி.மு.க., அரசின் தவறுகளை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்.

இதனால், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளே, ஹிந்துக்களை பா.ஜ., பக்கம் திருப்பி விடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனவே, பா.ஜ.,வை ஆதரிக்கும் ஹிந்துக்களை குழப்பும் வகையில், 'வி.சி.,களில் இருப்பவர்களில், 80 சதவீதம் பேர் ஹிந்துக்கள். 'கொள்கைகளை மாற்றிக் கொண்டால், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க தயார்' என, திருமாவளவன் பேசியுள்ளதாக, பா.ஜ., ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


வாசகர் கருத்து (76)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  இப்படியும் ஒரு பிழைப்பு, பேசியது ஒரு மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில், முன்னர் வேறொரு மதம் சம்பந்தப்பட்ட வழிபாட்டு தளங்கள் எதற்கு காட்டப்படுகின்றது என்று எங்கள் மதத்தின் நிகழ்ச்சியில் தான் அசிங்கமா பேசினாய், உனது கட்சியில் இந்துக்கள் இருந்தா இனி அவர்கள் சோறு சாப்பிட அருகதை இல்லை அப்படி ஒரு பேச்சு நீ பேசியுள்ளாய், இந்த நிலையில் திராவிட கழகத்தினர் போல நாத்திகம் பகுத்தறிவு மாதிரி சமத்துவத்தை உருட்டுகிறாய் ,

 • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

  என்ன அண்ணேஅங்கே இருந்து பப்பு ஒன்னும் வேகலயா.இந்த வெக்கம் கெட்ட பொழப்புக்கு என்னத்த சொல்ல,பதவி ஆசை யாரை விட்டது.யார் என்னவேனா சொல்லுங்க எங்களுக்கு தேவை பதவி அவ்வளோ தான் இதுதான் மக்களோட .

 • kulandai kannan -

  அண்ட விடவே கூடாது.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  "பிஸ்கட் நமுத்துப் போச்சு"....

 • g.s,rajan - chennai ,இந்தியா

  நமது இந்தியாவில் உடனடியாக ஜாதிக் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்