தமிழகத்தில் பா.ஜ., தனித்து போட்டி?

தமிழகத்தில், பா.ஜ., தனித்து போட்டியிடவே இந்த முயற்சி என சொல்லப்படுகிறது. 'என் பாத யாத்திரைக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட முடிவு செய்யலாம்' என கட்சி மேலிடத்தில், அண்ணாமலை சொல்லியிருக்கிறாராம்.

தி.மு.க.,விற்கு எதிராக அண்ணாமலை செய்யும் அதிரடி அரசியலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என கட்சி மேலிடம் நம்புகிறது. இதற்கிடையே, அ.தி.மு.க., பிளவுபட்டுள்ள நிலையில், அதை ஒன்றிணைக்கவும் பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. ஆனால், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைவார்கள் என்பது சந்தேகமே. எனவே, வரும் லோக்சபா தேர்தலில் தனியாக போட்டியிட்டு, தங்கள் கட்சிக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, பா.ஜ., தலைமை விரும்புகிறதாம். இதை வைத்து, 2026 தமிழக சட்டசபை தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பதை பா.ஜ., முடிவு செய்யும்.
வரும் 2024 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற அண்ணாமலையின் திட்டத்திற்கு, பா.ஜ., மேலிடம் ஆதரவு அளித்துவிட்டதாம்.
வாசகர் கருத்து (26)
பி.ஜே.பி தனியா நிக்க முடியாது ,முட்டுக் கொடுக்கணும் .
இந்த அரை வேக்காடாய் நம்பி அரா டௌசேர் கல் தான் வோட் போடும் பிஜேபி தனியாக நிற்றல் டெபாசிட் கிடைக்காது பாவம் அரை வேகத்துக்கு நேரம் சரி இல்லை போல
அதிமுக அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கின்றனர். பாஜக தமிழகத்தில் ஒருபோதும் தனித்து வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் அவமானங்களை சகித்துக்கொண்டு திமுகவுடன் பயணிக்கிறது. இவையெல்லாம் திமுகவுக்கு சாதமாகவே அமையும்
அண்ணாமலை வராது வந்த மாமணி. அவருக்கு மரியாதையை செய்ய திருவரங்கம் காத்திருக்கிறது. மற்ற தலைவர்களும் ஆளுக்கு நூறு கிராமம் போகணும். பூத் கமிட்டி ஆட்களுடன் பிஜேபி ஸ்போக்ஸ் பேர்சொன ஒரு நாளைக்கு இரண்டு கிராம சந்திப்பில் பேச வேண்டும். அண்ணாமலை முதல்வர் ஆகணும் என்றல் தமிழ் நாட்டின் கிராமங்கள் அதற்கு உதவ வேண்டும் .
பாஜக அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலில் நின்று பார்த்தால் தான் தெரியும், சோசியல் மீடியா ஆதரவு வேறு தேர்தலில் ஓட்டு கிடைப்பது வேறு என்று.