Load Image
Advertisement

2042-க்கு மேல் இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம்

By 2042 the average Per Capita Income of Indians will be Rs.10 lakh 2042-க்கு மேல் இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம்
ADVERTISEMENT
“இந்தியாவை வளர்ந்த நாடாக வகைப்படுத்த தனிநபர் ஆண்டு வருமானம் 13,205 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம்) இருக்க வேண்டும். ஆண்டுக்கு 8 - 9% என்ற வலுவான வளர்ச்சியை இந்தியா பெற்றால், வளர்ந்த நாடாக 20 ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கும்” என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமான சி ரங்கராஜன் தெரிவித்தார்.


உயர்கல்வி அறக்கட்டளையான ஐ.சி.எப்.ஏ.ஐ.,யின் 12வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ரங்கராஜன் பேசியதாவது: ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதுவே ஒரு வியத்தகு சாதனை. ஆனால் தனிநபர் வருவாயைப் பொறுத்தவரை, சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) படி, இந்தியாவின் தரவரிசை 197 நாடுகளில் 142 ஆக உள்ளது.

Latest Tamil News
அரசின் உடனடி கவனம் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்பது ஒரு நல்ல குறுகிய கால லட்சிய இலக்கு. இதற்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் நீடித்த 9 சதவீத வளர்ச்சி தேவைப்படும். அப்போதும் கூட இந்தியாவின் தனிநபர் ஆண்டு வருமானம் சராசரியாக 3,472 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.2.7 லட்சம்) மட்டுமே இருக்கும். இதனால் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்படுவோம்.


எனவே நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. நாம் நிச்சயமாக வேகமாக இயங்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கோவிட் மற்றும் ரஷ்ய - உக்ரைன் போருக்குப் பிறகு, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான தெளிவான வரைபடத்தை வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது.


ஆரம்பத்தில், வளர்ச்சி விகிதத்தை ஏழு சதவீதமாக உயர்த்த வேண்டும். பின்னர் 8 முதல் 9 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் அதைத் தொடர வேண்டும். இது சாத்தியம் தான். கடந்த காலத்தில் இத்தகைய வளர்ச்சியை ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை நீடித்த அளவில் இந்தியா பெற்றது. இவ்வாறு கூறினார்.


வாசகர் கருத்து (13)

  • muru -

    அரிசி விலை 500₹ இருக்கும்..

  • அப்புசாமி -

    இவர் 20 வருஷ திட்டமிடுதலில் இருந்தவர். எனவே 2042 க்கு டார்கெட் குடுக்கிறாரு. அடுத்த வருஷம் என்ன ஆகும்னே யாராலும் சொல்ல முடியாது.

  • ஆரூர் ரங் -

    140 கோடி மக்கள் தொகையுடன் வல்லரசாக ஆவது நடக்காத வேலை. எல்லோரையும் பணக்காரர்கள் ஆக்க முயற்சிப்பது போகாத ஊருக்கு வழி.🤔 ஆனால் பெரும்பாலானவர்களை ஏழைகளாக வைத்திருப்பது அநியாயம் .. எல்லோருக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருதல் மட்டுமே சாத்தியம்.

  • amuthan - kanyakumari,இந்தியா

    ஒருவேளை அன்றைய செலவு 15 லட்சம் ரூபாய் ஆக இருக்கலாம்

  • Sivagiri - chennai,இந்தியா

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன் - மாதம் 30-ருபாய் சம்பளம் - அரிசி கிலோ 3-ரூபாய் - பெட்ரோல் லிட்டர் 3-ரூபாய் - தங்கம் கிராம் 40-ருபாய்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement