கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததும், 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் பா.ம.க., கூட்டணி அமைத்தது. ஆனாலும், அக்கட்சியின் கூட்டணி கணக்குகள் தோல்வி அடைந்தன. அதைத் தொடர்ந்து, ஜாதி சங்கங்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில்ராமதாஸ் இறங்கினார்.
பலன் கொடுக்கவில்லை:
ஜாதி சங்க தலைவர்களின் கூட்டத்தை கூட்டினார். 50-க்கும் அதிகமான ஜாதி சங்கங்களை ஒருங்கிணைத்து, 'அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை' என்ற அமைப்பை உருவாக்கினார். அந்த காலகட்டத்தில், பல்வேறு ஜாதி சங்கங்களின் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் ராமதாஸ் பங்கேற்றார். ஆனால், இந்த முயற்சிகள், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, பா.ம.க., தனித்து போட்டியிட்ட, 2016 சட்டசபை தேர்தலில் பலன் கொடுக்கவில்லை.

அழைப்பு:
சமீபத்தில், பா.ம.க.,வில் இணைந்த சேலம் ராமசாமி உடையாரின் மகனும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான தேவதாசுக்கு, மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, திருச்சியில் நடக்கவுள்ள பிள்ளைமார் சமுதாய மாநாட்டில் ராமதாஸ் பங்கேற்க இருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பா.ம.க., மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள் தலைமையில், பிள்ளைமார் சமுதாயத்தினர், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், ராமதாசை சந்தித்து, மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு, பா.ம.க.,வுக்கான ஆதரவு வட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்திலேயே, மீண்டும் ஜாதி சங்கங்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ராமதாஸ் ஈடுபட்டிருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து (22)
இவர் ஒரு ரகம் , சில ஆட்களை வைத்து மதத்தவர்களை மிரட்டுவது
மரம் வெட்டி டவுசர் தாஸ்
என்னவோ பண்ணுங்க தலீவரே ஆனால் பெண்களை அவமதித்த கழகத்திக்கு ஆதரவு கொடுக்காதீங்க , அப்புறம் ஓசி ஆயிடுவீங்க
மரம் வெட்டி அரை ட்ரவுசர் ராமதாஸ் அண்ணாச்சிக்கு ஜாதி இல்லை என்றால் பிழைப்பு நடத்த mutiyaathu
ஸ்டாலின் கூட பிள்ளைமார்தான். பிள்ளை கிரிஸ்துமார்.