திமுகவின் பொங்கல் பரிசு ஒரு ஏமாற்று வேலை: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: மக்களை ஏமாற்றி விவசாயிகளை வஞ்சித்து, இந்த திமுக அரசு வழங்கவிருப்பது பொங்கல் பரிசு தொகுப்பு அல்ல பொங்கல் பொய் தொகுப்பு என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்ற ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் உருகிய வெல்லம், பல்லி இருந்த புளி, பருத்திக்கோட்டை கலந்த மிளகு என்ற பொங்கல் தொகுப்பை வழங்கி மாபெரும் சாதனை புரிந்தது திமுக அரசு. இந்த ஆண்டு மக்களின் ஆரோக்கிய நலனை கருத்தில் கொண்டு சென்ற வருடம் வழங்கப்பட்ட தரமற்ற பொங்கல் பரிசை இந்த ஆண்டு தவிர்த்தமைக்கு நன்றி.
மக்களை ஏமாற்றி விவசாயிகளை வஞ்சித்து, இந்த திமுக அரசு வழங்கவிருப்பது பொங்கல் பரிசு தொகுப்பு அல்ல பொங்கல் பொய் தொகுப்பு. தமிழகத்தில் உள்ள 2.16 கோடி குடும்ப அட்டைதாரர்களுடன் 2356.67 கோடி ரூபாய் செலவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்ற செய்தியை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
ஆட்சிக்கு வந்தால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ஆதார விலையாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு.அந்த வாக்குறுதியை மறந்தது மட்டும் அல்லாது அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருக்கிறது.
ஒரு கிலோ அரசி 21 ரூபாய்க்கும் ஒரு கிலோ சர்க்கரையை 31 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யும் தமிழக அரசு, வழங்கப்படவிருக்கும் பொங்கல் தொகுப்பில் இந்த பொருட்களின் விலை 76 ரூபாய் என்று கணக்கு காட்டியுள்ளதையும் இந்த அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ஒரு கரும்பு, ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க வேண்டும்
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ஒரு கரும்பு, ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க வேண்டும். பனை பொருட்களை விநியோகிப்போம் என்ற அறிவிப்பை தமிழ் அரசு நிறைவேற்றவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக போர்க்கொடி உயர்த்தியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை: அரசு ஊழியர்கள் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்க வேண்டும். கடந்த ஜீலை மாதம் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
வாசகர் கருத்து (20)
//...எதிர்கட்சியாக இருந்தபோது ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும்...//....எடப்பாடி 2500 ரூபாய் கொடுத்தாரு ...அப்ப 5000 ரூபாய் கொடுக்கனும்னு கூவினது யாரு ?....தூத்துக்குடி அக்காவும் ரூபாய் 5000 எங்கே என்று கூவினாங்களே ....இப்ப ஒரு கரும்பு துண்டுக்கே வழியில்லை ...
மோடி(ஜி) வித்தையை விடவா ???.
அப்புவுக்கு என்னைக்கு பி.ஜே.பி யில இருந்து பதினைந்து லட்சம் போடறாங்களோ அன்னைக்குத்தான் நிம்மதியா தூக்கம் வரும் போல இருக்கு ,.அதுவரை அதைப் பத்தியே ரொம்பக் கவலை அவருக்கு
1). எந்த புண்ணியவான் ஆரம்பித்தது இந்த பொங்கல் ஈனாம் என்று தெரியவில்லை.2). அப்படியே பார்த்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் குடுத்து இருக்கலாம்.எந்த ஐடியா அய்யாசாமி வேலையை பார்த்தது என தெரியவில்லை. 3). மேலும் கரும்பு குடுத்து இருந்தால் கருப்பு கரும்பு இந்த பொங்கல் பண்டிகைக்கு என்றே விளைவிக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து இருக்கும். 4). இப்பொழுது இந்த தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிட்டது.5). வெல்லம் குடுத்து இருந்தால் தமிழக விவசாயிகள் பலன் பெறுவதுடன் நமது தென் தமிழக வெல்லம் தயாரிக்கும் மக்களும் பயன் அடைந்து இருப்பார்கள்.6). கலைஞர் அய்யா தன் சொந்த யோசனையில் அனைத்தையும் செய்வார். நம்மவர் எடுப்பார் கை பிள்ளை. என்னத்த சொல்ல.
விலை, விவசாயிக்கு நஷ்டம் வந்தாலும் அரசுக்கு நஷ்டம் வரலாமா உழவுக்கும். தொழிலுக்கும் வந்தனை மட்டுமே