Load Image
Advertisement

ஐபிஎல் ஏலம்: ரூ.18.5 கோடிக்கு ஏலம் போன சாம் கரண்; சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ்

IPL auction: Sam curran auctioned for Rs 18.5 crore; Ben Stokes in the Chennai Super Kings ஐபிஎல் ஏலம்: ரூ.18.5 கோடிக்கு ஏலம் போன சாம் கரண்; சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ்
ADVERTISEMENT

கொச்சி: ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்களின் 'மினி' ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து இளம் ஆல்ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.


இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர் நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான, வீரர்களின் 'மினி' ஏலம் இன்று (டிச.,23) கேரளாவின் கொச்சியில் நடக்கிறது.

இதில், 87 இடங்களுக்கு இந்தியா தரப்பில் 273, வெளிநாட்டை சேர்ந்த 132 வீரர்கள் என மொத்தம் 405 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். இன்றைய ஏலத்தில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

Latest Tamil News
இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கு ஐதராபாத்தை ஏலம் எடுத்தது. மற்றொரு இங்கிலாந்து ஆல்ரவுண்டரான சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி, ரூ.18.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை சாம் கரண் பெற்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை ரூ.17.5 கோடிக்கு எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்