Load Image
Advertisement

ராகுல் ஒற்றுமை யாத்திரையில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்பு

சண்டிகர்: ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று (டிச.,23) கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.

Latest Tamil News


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கிய ராகுலின், 'பாரத் ஜோடோ யாத்திரை' கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக சென்று, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை டிச.,21ம் தேதி ஹரியானா மாநிலத்திற்குள் நுழைந்தது. ராஜஸ்தானில் இருந்து முன்டஹா எல்லை வழியாக யாத்திரை ஹரியானாவுக்குள் நுழைந்தது. தொடர்ச்சியாக நேற்று (டிச.,22) ஹரியானா மாநிலம் நூவில் மேற்கொண்டார்.

Latest Tamil News

இன்று(டிச.,23) ராகுல் ஒற்றுமை யாத்திரையில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டு ராகுலுடன் நடந்து சென்றார். மேலும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து (32)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    "பாம்பின் கால் பாம்பறியும்"....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    நான் ஒரு ராசியில்லா ராஜான்னு சொல்லி இருப்பாரு .

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இனம் இனத்தோடுதான் சேரும். ஆம் கனிமொழி மற்றும் ராகுல், ஊழல் இனம்.

  • sridhar - Chennai,இந்தியா

    ராகுல் , ஜாக்கிரதை . ஏற்கனவே பேரு கெட்டுக்கிடக்கு . மாட்டிக்காதே .

  • பேசும் தமிழன் -

    ஊழல் வழக்கில் இருவரும் திகார் சிறைக்கு போனால் என்ன செய்யலாம் என்று யோசனை செய்து இருப்பார்களோ ???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement