மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
புதுடில்லி: பாரத் பயோ டெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருத்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறுத்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாரத் பயோ டெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும். கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் திட்டத்தில் இன்று முதல் சேர்க்கப்படும்.

பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்புமருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதற்கட்டமாக மூக்கு வழி கொரோனா மருந்து செலுத்தப்படுகிறது. இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!