Load Image
Advertisement

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

If you dont wear a helmet..! DGP to police, warning   ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை
ADVERTISEMENT
சென்னை: 'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துசெல்வோர், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம். மீறுவோருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்டநகரங்களில், 90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்துவாகனம் ஓட்டுகின்றனர்.

பின், இருக்கையில் அமர்ந்து செல்வோரில், 10 சதவீதம் பேர் தான் ஹெல்மெட் அணிகின்றனர் என, போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். கிராமங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள, சிறு நகர பகுதிகளில், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மிகவும் குறைவு.

பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணிவது இல்லை என, தெரிய வந்துள்ளது. இதனால், ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்தபோலீசாரிடம், வாகனத்தைபறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கிவந்து காண்பித்த பின் தான், வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
Latest Tamil News வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 'போலீஸ்' என்ற அடையாளத்தை காரணமாக கூறி, வாக்குவாதம் செய்வோர் மீது, வழக்கு பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது துறை ரீதியாக மட்டுமல்லாமல், வழக்கு பதிவும் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் அலட்சியமாக இருக்க வேண்டாம்' என்றனர்.


வாசகர் கருத்து (9)

  • பைரவர் சம்பத் குமார் -

    1). நாட்டில் பெருகிவரும் ஜனத்தொகை, சைபர் க்ரைம், வாகன போக்கு வரத்து, தவறான டிஜிட்டல் மீடியா பரப்புரைகள், தீவிரவாதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு போலீஸ் துறையை நவீன படுத்த .2). போலிஸ் துறைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.அதனை முதலில் நிரப்ப வேண்டும்.3).மாடர்ன் ஆயுதங்கள் மற்றும் ஸ்கேனர்கள், கம்யூட்டர் முதலியன வழங்க வேண்டும்.4). இந்தியா முழுவதும் உள்ள எல்லா காவல்துறை களை இணைக்க வேண்டும். 5). போதிய சம்பளம் மற்றும் விடுமுறை அளிக்க வேண்டும்.6). எல்லா மாநில டிஜிபிகளும் அந்த அந்த மாநில உள்துறை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்கப்பட்ட குழவின் கீழ் பணிபுரிய வேண்டும்.

  • Raa - Chennai,இந்தியா

    மிடில் கிளாஸ் இருசக்கர ஓட்டிகள் தானே இவர்களின் சாப்ட் டார்கெட். பஸ்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 52 க்கு டபுள் மடங்கு கூட செல்லலாம்.....அரசியல் வாதிகள் கார் கண்ணாடிக்கு மிக கருப்பான sheet ஒட்டிக்கொள்ளலாம்..... முதல்வர் கான்வாய் வாகனத்தில் ஒரு அடிக்கு வெளியில் நீட்டிக்கொண்டு படிக்கட்டு இருக்கலாம் (மேயர் தொங்கிக்கொண்டு செல்ல). எதுவெல்லாம் மோட்டார் வாகன சட்டத்தில் இருக்க என இனிமேதான் பார்க்க வேண்டும் போல

  • Sheik khader - Chennai ,ஆர்மேனியா

    போலீஸ், அட்வகேட் ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் அடிப்படாது

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    எந்த நீதிபதியும் சீட் பெல்ட் அணிவதே இல்லை. அவர்களுக்கு யார் அபராதம் விதிப்பது சைக்கிள் பாபு?

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    முதல்வர் காரில் சீட்பெல்ட் அணியாமல் செல்வதை இவர் பார்ப்பதே இல்லையா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement