Load Image
Advertisement

உலக உயிர்களை காப்பாற்றிய இந்திய தடுப்பூசி

Tamil News
ADVERTISEMENT
சென்னை :''உலக நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்களை, இந்திய கொரோனா தடுப்பூசி காப்பாற்றியது,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா பேசினார்.


மத்திய மருந்து தர நிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பான, சி.டி.எஸ்.சி.ஓ.,வின் தென்மண்டல அலுவலகத்திற்கு, சென்னை, பெரியமேட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.அதை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
Latest Tamil News

அவர் பேசியதாவது:நாட்டின் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில், சென்னையில் அமைந்து உள்ள தென்மண்டல சி.டி.எஸ்.சி.ஓ., பவன் முக்கிய பங்காற்றுகிறது.குறிப்பாக, மருந்து தயாரிப்பு, இறக்குமதி, வினியோகம், சுகாதாரம் சார்ந்த பொருட்களை மக்களிடம் சேர்ப்பதில், மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பங்கு முக்கியமானது.
நாட்டு மக்களுக்கு சரியான நேரத்தில், சரியான மருந்தை பொறுப்புடனும், வெளிப்படைத் தன்மையுடனும் தரும் பணியை, இந்நிறுவனம் செய்கிறது.உதாரணமாக, கொரோனா பரவலின் போது, இந்தியா முதல் தடுப்பூசியைக் கண்டறிந்து, நாட்டு மக்களுக்கு வழங்கியது; லட்சக்கணக்கான உயிர்களை காத்தது. அது மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் வழங்கி, லட்சக்கணக்கான வர்களை காப்பாற்றினோம். அதாவது, உரிய மருந்து, உரிய நேரத்தில் வழங்கினால் தான் சிறந்த மருத்துவத்தை மக்களுக்கு அளிக்க முடியும். அந்த பணியை சிறப்பாக செய்ய, தென்மண்டல அலுவலகத்தின் விரிவாக்கம் மிகவும் உதவும். இது, மருந்து, மருத்துவம், மருத்துவக் கருவிகளை தரம் உயர்த்தி, தங்கு தடையின்றி வழங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சக துணைச் செயலர் மந்தீப் கே.பண்டாரி, தென்மண்டல துணை மருந்து கட்டுப்பாட்டாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (6)

  • venugopal s -

    கொரோனா பாதிப்பில் இருந்து மத்திய பாஜக அரசு இந்திய மக்களின் உயிரையே ஒழுங்காக காப்பாற்ற வில்லை, இதில் உலக உயிர்களை காப்பாற்றினார்களாம். பொய் சொல்ல ஒரு அளவே இல்லையா?

  • சரவண ராமநாதன். சோ -

    கொரோனா தடுப்பூசி மூலம் பலகோடி உயிர்களை இந்தியா காத்துள்ளது. இந்தப் பெருமை நமது மத்திய அரசையே சேரும். அரசின் பங்கு மகத்தானது.

  • Singa Muthu - vadugapatti,இந்தியா

    அடப்பாவி.. உனக்கு தான் அமைச்சர் பதவி கிடைத்துவிட்டதே அப்புறம் எதுக்கு உருட்டு? எப்போ அறிவு வரும் உங்களுக்கெல்லாம் ? ஹா ஹா ஹா

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    இனி வரப்போகும் நாள்களில் தான் அந்த மருந்தின் வீரியம் தெரியும் அய்யா

  • Jayaraman Gopalakrishnan - Singapore City,சிங்கப்பூர்

    மோடிஜி தனிப்பட்ட முறையில் மிகவும் சிறப்பாக கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement