Load Image
Advertisement

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வரும் ஜன.,2ம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Latest Tamil News


வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில தினங்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின் படி, வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்புகள் வரும் ஜன.,2ம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் அரசுக்கு ரூ. 2,356,67 கோடி செலவாகும்

Latest Tamil News

மேலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்புகள் முடிவு செய்யப்பட்டது. பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை வரும் ஜன.,2ம் தே தி சென்னையில் துவக்கி வைக்கிறார்.


வாசகர் கருத்து (26)

  • ஆரூர் ரங் -

    இந்த ஆண்டு வெல்லத்தின் உருகுநிலை எப்படி MELTING POINT சரவணா😉? சென்றண்டு போல உள்ளே🙃 விலையில்லா பல்லி, ஸ்குரூ ஆணி இருக்குமா ?

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    பெண்களுக்கு மாதா மாதம் இரண்டாயிரம் கொடுப்போம் என்றார்கள் அப்படி சொன்னபடி மாதந்தோறும் கொடுத்திருந்தால் அரசுக்கு வருவாய் இழப்பு என்பது உண்மை தான். ஆண்டுக்கு ஒரு முறைவரும் பொங்கல்உக்காக ஒரு தடவை மட்டும் ஆயிரம் கொடுக்கும்போது அந்த வருவாய் இழப்பயம் இதையும் ஒப்பிட்டு பார்க்கும்போது எவ்வளவோ லாபம் தானே. அதனால் இரண்டாயிரம் தாராளமாக இந்த நன்றி உள்ளவன் என்று நிரூபிக்கும் விழாவிலே நன்றியோடு தாராளாமாக இரண்டாயிரம் கொடுக்கலாம்.. ஒரு தடவை இரண்டாயிரம் கொடுக்கமுடியாது என்று தெரிந்தும் மாசந்தோறும் இரண்டாயிரம் கொடுப்போம் என்று சொல்ல எப்படி ஐயா முடிந்தது? அதிமுக அரசு கஜானாவைபொங்கல் வழிய வைச்சிட்டு போயிருக்காங்க என்று நினைச்சிடீங்க போலிருக்கு ..உடம்பெல்லாம் மூளை ஐயா

  • Mohan - Thanjavur ,இந்தியா

    மன்னா, கருத்துபகுதியில் கன்னா பின்னாவென்று கேவலப்படுத்துகிறார்கள் மன்னா. அவர் ரெண்டு விரலை காட்டி ரெண்டாயிரம் கொடுத்தார். நீர் ஐந்து விரலை காட்டுவதால் ஐந்தாயிரமாக தந்துவிடுங்கள் மன்னா.

  • Unmai vilambi - Chennai,இந்தியா

    நான் ரேஷன் கடையும் கட்சி ஆபீஸ் போல் ஆகி விடும் பேனர் என்ன கட் அவுட் என்ன ஏதோ சொந்த பணத்தை கொடுக்கிற மாதிரி

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    ஹி...ஹி...ஹி...கொடுக்கும் ஆயிரம் ரூபாயும் மறைமுகமாக கட்டுமர திருட்டு திமுகவின் சாராய ஆலை அதிபர்களுக்கு டாஸ்மாக் மூலம் மறைமுகமாக வந்து சேர்ந்துவிடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement