வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை: வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- தென் மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிளகில் இன்றும்(டிச.,22), நாளையும்(டிச.,23) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும்(24.,): தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென் மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்துக்கு கிழக்கு-வடகிழக்கே 600 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- தென் மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிளகில் இன்றும்(டிச.,22), நாளையும்(டிச.,23) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும்(24.,): தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்க்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலுங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புயல் கூண்டு ஏற்றம்:
தூத்துக்குடி, ராமேஸ்வரம், கடலூர், எண்ணுார் ஆகிய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று தேனீ பக்கம் வீசும்போது