இந்தியாவில் பி.எப்.7 புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது; சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை

சீனாவில் உகான் நகரில் 2019 டிசம்பரில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சீனாவில் முதலில் தொற்று அறியப்பட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகளால் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உலக நாடுகளை இரண்டரை ஆண்டுகளாக உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த சூழலில், சீனாவில் சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் போராட்டம் எதிரொலியாக கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.
பி.எப்.7 வைரஸ்:
இந்நிலையில் சீனாவை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் பி.எப்.7 இந்தியாவில் இன்று(டிச.,21) கண்டறியப்பட்டுள்ளது. இது குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் பி.எப்.7 புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நடவடிக்கை:
சீனாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மத்திய சுகாதார துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
பரிசோதனை தீவிரம்: சர்வேத விமான பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து (13)
போச்சுடா... ஏர்போர்ட்டில் இறங்குன உடனே ஆயிரத்தைக் கொண்டா, ரெண்டாயிரத்த கொண்டான்னு கொரோனா பரிசோதனைக்குன்னு உருவ ஆரம்பிச்சுருவாங்க.
கொரோனா கிட்டத்தட்ட முடிஞ்சி போச்சுன்னு நெனச்சா திரும்பவும் வந்து நிக்குது. என்னைக்கு முடியுமோ?
அடுத்த சாவுமணி அடிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க...
சீனாவுடனான அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். சீன - இந்திய பயணிகள் அனைவரும் குவாரண்டைனில் வைத்து கண்காணிப்பு செய்ய வேண்டும்
சீன இறக்குமதிகள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்புள்ளது. இறக்குமதிகளை நிறுத்தவும்.