புதுடில்லி: தேர்தல் ஆணையத்தில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு பழனிசாமி தாக்கல் செய்த கட்சியின் வரவு செலவு கணக்கு, வருடாந்திர செலவு கணக்குகளை ஏற்று கொண்ட தேர்தல் ஆணையம் அதனை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
ஆனால், இதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பொதுக்குழுவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்.,29 அன்று, பழனிசாமி தாக்கல் செய்த அதிமுக.,வின் வரவு செலவு கணக்குகள், அக்.,3 ல் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளது.
அதிமுக.,வின் இடைக்கால பொது செயலாளர் என அந்த ஆவணங்களில் பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். இதனை ஏற்று கொண்டுள்ள தேர்தல் ஆணையம் அதனை, இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.
வாசகர் கருத்து (11)
பல்லில்லாத வழ வழா, கொழ கொழா ஆணையம்.. ஒரு சேஷன் இருந்திருந்தால் தோண்டியெடுத்திருப்ப்பார்.
மிக அருமை. வாழ்த்துக்கள்..
இது வழக்கமான வரவு செலவு கணக்கு தான். இதை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டது. எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதம் தான் இது, அதில் அவர் இடைக்கால பொது செயலாளர் என்று கை ஒப்பம் இட்டு உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பும் அதை உறுதி படுத்தி உள்ளது. இதை எதிர்த்து தான் சுப்ரீம் கோர்ட்டில் பன்னீர் தரப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் வரவு செலவு கணக்கை தான் ஏற்று கொண்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பிரிவு அதிமுக என்று தேர்தல் கமிசன் அங்கீகாரம் கொடுத்து கடிதம் கொடுக்கவில்லை. பன்னீர்செல்வம் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்து இருந்தால் அதையும் ஏற்று கொண்டு தான் இருப்பார்கள்.
பா.ஜ.க.ஆதரவு உறுதியாகி விட்டது போலும். ஓ,பி.எஸ். ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவரு யாரு சொல்லி இதை சேய்தரு நாட்குக்கே தெய்ரயும் ஆனாலும் இந்த தேய்த்தல் ஆணையம்??/ இந்த தேர்தல் அமைப்பு என்பது வரும் கண்ணன் துடைப்பு நிறுவனம் என்பதி குஜராத் தேர் தாளில் காணலாம்