Load Image
Advertisement

திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் மரணம்

 திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் மரணம்
ADVERTISEMENT
சென்னை: திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர், தர்மா ரெட்டியின் மகன் சந்திரமவுலி, 28, மாரடைப்பால் உயிரிழந்தார்.ஆந்திரா மாநிலம்,
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி ரெட்டி.

இவருக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழகம், புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி மகளுக்கும், சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண அழைப்பிதழ்களை, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சந்திரமவுலி வழங்கி வந்தார்.
கடந்த, 18ம் தேதி மாலை, 5:00 மணியளவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுக்க சென்றபோது, சந்திர
மவுலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனையில், அவரது இதயம் செயல் இழந்திருப்பது தெரிய வந்தது. அவருக்கு, செயற்கை சுவாச உதவியுடன் இதயம் மற்றும் நுரையீரலை
மீட்டெடுக்க, 'எக்மோ' கருவி வாயிலாக டாக்டர்கள், தீவிர சிகிச்சை அளித்தனர்.அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக உடல் உறுப்புகள் செயலிழந்து கவலைக்கிடமான நிலைக்கு சென்றார்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை, 8:20 மணிக்கு சந்திரமவுலி உயிரிழந்தார். சந்திரமவுலி விருப்பத்தின்படி, அவரது கண்கள் தானம்
செய்யப்பட்டன.அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், சந்திரமவுலி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், தர்மா ரெட்டி, சேகர் ரெட்டி குடும்பத்தினரிடையே சோகத்தை
ஏற்படுத்தி உள்ளது.


வாசகர் கருத்து (20)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பாவத்தின் சம்பளம் ,மரணம் .

  • periasamy - KARAIKUDI,இந்தியா

    வருந்துகிறேன் என்ன செய்வது பெற்றோர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி என்ற பாடல் வரிகள் நிலைக்கு வருகிறது

  • Mali - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    அப்போல்லோ ஆஸ்பத்திரியா?

  • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

    இளம் வயதிலேயே மரணம் அடைந்திருக்கிறார் தனிப்பட்ட மனிதர் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள முடியாது

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    சோகம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement