இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாதுன்னு விவேகம் படத்துல அஜித் சொல்ற டயலாக், நிச்சயமாக மெஸ்சிக்கு பொருந்தும். உலகம் முழுக்க உள்ள கால்பந்து ரசிகர்களால் அன்போடு கோட் (GOAT), அதாவது கிரேட்டஸ் ஆப் ஆல் டைம்-னு அழைக்கப்படுகிற லியோனல் மெஸ்சி, கத்தாரில் தனது உலக கோப்பை கனவை நனவாக்கியது மட்டுமல்ல..பல சாதனைகளை படைத்துள்ளார்.
1. அதிக கோல் அடித்த அர்ஜென்டினா வீரர்
:
ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெற்றுள்ளார்.
2. இளம் மற்றும் வயதான வீரர் :
ஃபிபா உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், கோல் அடித்த இளம் மற்றும் வயதான வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். முன்னதாக, ஒரு ஆட்டத்தில் கோல் அடித்து உதவிய இளம் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்திருந்தார்.
3. அனைத்து சுற்றுக்களிலும் கோல் அடித்த வீரர் :
பிரான்ஸ் அணிக்கு எதிரான பைனலில் 2 கோல்கள் அடித்து அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய மெஸ்சி, உலக கோப்பை தொடரில் அனைத்து சுற்று போட்டிகளிலும் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். நடப்பு தொடரில் குரூப் போட்டிகள், ரவுண்ட் ஆப் 16 சுற்று , காலிறுதி, அரையிறுதி, இறுதி என அனைத்து சுற்று போட்டிகளில் மெஸ்சி கோல் அடித்துள்ளார்.
4. அதிக நேரம் விளையாடிய வீரர் :
குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு, உலக கோப்பை வரலாற்றில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் (23 நிமிடங்கள்) என்ற பெருமையை மெஸ்சி பெற்றார். மேலும், பைனலில் விளையாடியதன் மூலம், இத்தாலிய முன்கள கால்பந்து வீரரான மால்டினியின் சாதனையை மெஸ்சி முறியடித்தார்.
5. அதிக போட்டியில் பங்கேற்ற வீரர் :
கடந்த 2006ம் ஆண்டு முதல் 5 உலக கோப்பை தொடர்களில், மெஸ்சி மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம், உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என நீண்ட கால சாதனையை வைத்திருந்த லோதர் மத்தாஸ் சாதனையை முறியடித்தார்.
வாசகர் கருத்து (4)
மெஸ்ஸி மந்திரம் எல்லா ரசிகர்களையும் கட்டிப் போட்டு வைத்துள்ளது. தலைகனம் சிறிதும் இல்லாத தலைவன். எதிரணி கோல்கள் போடுகையில் தவறான முகபாவனை காட்டாத வீரர். எல்லோரும் பாராட்டும் குறை சொல்ல முடியாத வீரர். மெஸ்ஸி வெற்றிக்குப்பின் கட்டிப்பிடித்த தன் கழந்தைகளை அணைத்து சிரிக்கையில் அன்பான தகப்பனாகவும்,மற்ற குழந்தைகளுக்கும் அன்பான மனிதனாக தெரிந்த மெஸ்ஸி மீதான என்னுடைய ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அனைத்து எதிரணி வீரர்களும் அவரிடம் காட்டிய முரட்டுத்தனங்களை சிறிதும் சட்டை செய்யாத மாவீரர். மனித நேயமும் Tolerance ம் விளையாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என உணர வைத்த நல்ல மனிதன்.
Great player
Messi is the God of foot ball....
மெஸ்ஸி கால்பந்து சிங்கம் அர்ஜென்டினா தேசத் தங்கம்