ADVERTISEMENT
சென்னை: தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கைக்கு போட்டியாக உருவாக்கப்படும், தமிழகத்தின் மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பொதுமக்கள், நிபுணர்களின் கருத்து கேட்புக்காக, அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
தேசிய அளவில் தயார் செய்யப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை, 2020ல் இறுதி செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் ஊரடங்கால், கடந்த ஆண்டில் புதிய கல்வி கொள்கையை, மத்திய அரசால் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.
நடப்பு கல்வி ஆண்டில், புதிய கல்வி கொள்கையின் பெரும்பாலான அம்சங்கள், அனைத்து மாநில கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன.

தமிழகத்தில், தி.மு.க., அரசு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அரசியல் ரீதியாக எதிர்த்து வருகிறது. அதனால், புதிய கொள்கையின் அம்சங்கள், தமிழகத்தில் வேறு பெயர்களில் தனித்தனியாக அமலாகி உள்ளன.
அதேநேரம், தேசிய கல்வி கொள்கைக்கு போட்டியாக, மாநில அளவில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப் படுகிறது.
இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடித்துள்ளனர்.
தமிழக அரசு உருவாக்கி வரும், மாநில அளவிலான புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் வரைவு அறிக்கையை அடுத்த மாதம் வெளியிட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அறிக்கைமீது பொதுமக்கள் மற்றும் துறை சார் நிபுணர்களிடம் கருத்து கேட்டபின், இறுதி அறிக்கை தயாராகும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (3)
இதில் ஊழல் பற்றிய சிறப்பு பாடம் இருக்குதா ?
ஸ்டிக்கர் ஒட்டிக்க வேண்டியது தானே
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தி புரிந்துகொன்டும் பேசுவதும் இன்றைய காலத்தின் கட்டாயம் இந்தியாவை பொறுத்தவரை. இதில் மாருகருது இருக்க வழியில்லை. ஆறாம் வகுப்பு முதல் பஅத்தம் வகுப்பு வரை வாரத்திற்கு ஒருமுறை ஹிந்தி வகுப்பு கட்டாயமாக்கப் படவேண்டும். தேர்வு எழுத வேண்டும் என்பது அவரவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடவேண்டும். இதன் மூலம் மாணவர்களின் அகில இந்தியா வாய்ப்பினை தடுக்காமல் இருக்கும். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது வருடங்களில் இது நடைமுறையில் இருந்தது.