உலக சாம்பியனாக தொடர்ந்து விளையாடுவேன்: கோப்பை வென்றதும் ஓய்வு முடிவை மாற்றினார் மெஸ்சி
கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று லுசெய்ல் மைதானத்தில் நடந்த பைனலில் அர்ஜென்டினா(உலக ரேங்கிங்கில் 3வது இடம்), பிரான்ஸ்(4வது இடம்) அணிகள் மோதின.

மெஸ்சி கோ...ல்
இந்த 'பெனால்டி' வாய்ப்பில் கேப்டன் மெஸ்சி(23வது நிமிடம்) இடது காலால் பந்தை உதைத்து 'கூலாக' கோல் அடித்தார். வலது பக்கமாக 'டைவ்' அடித்த பிரான்ஸ் கீப்பர் லோரிஸ் ஏமாந்து போனார். சக வீரர்களுடன் சேர்ந்து கோல் அடித்த உற்சாகத்தை கொண்டாடினார் மெஸ்சி.
அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. மீண்டும் மெஸ்சி 'மேஜிக்' தொடர்ந்தது. இவர், பந்தை துடிப்பாக அலிஸ்டருக்கு அனுப்பினார். அலிஸ்டர் அருமையாக டி மரியாவுக்கு 'பாஸ்' செய்தார். அதே வேகத்தில் டி மரியா(36வது நிமிடம்) அற்புத கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என வலுவான முன்னிலை பெற்றது.
எம்பாப்வே 'மூன்று'
இரண்டாவது பாதியில் ஆட்டம் தலைகீழாக மாறியது. பிரான்ஸ் வீரர்கள் துடிப்பாக ஆட, அர்ஜென்டினா அணியினர் தடுமாறினர். 79வது நிமிடத்தில் கோலோ முவானியை 'பெனால்டி பாக்சில்' வைத்து கீழே தள்ளினார் அர்ஜென்டினாவின் ஒட்டமெண்டி. இதற்கு நடுவர் 'பெனால்டி' வழங்கினார்.
இந்த வாய்ப்பில் எம்பாப்வே (80வது நிமிடம்) அருமையாக கோல் அடிக்க, அரங்கில் இருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் ஆர்ப்பரித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 81வது நிமிடத்தில் துராம் கொடுத்த 'பாசை' பெற்ற எம்பாப்வே மீண்டும் ஒரு கோல் அடித்து மிரட்டினார்.
இரண்டாவது பாதி முடிவில், 2-2 என சமநிலையை எட்ட, போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. 108வது நிமிடத்தில் லவுடேரோ மார்டினஸ் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் வெளியே தள்ளினார்.
இதனை பெற்ற மெஸ்சி சாமர்த்தியமாக கோல் அடித்தார். உபமெகானோ கோல் லைனுக்கு பின் நின்று தடுத்தும் பலன் கிடைக்கவில்லை. 'வார்' தொழில்நுட்பத்தில் கோல் உறுதி செய்யப்பட, மெஸ்சி உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். அர்ஜென்டினா 3-2 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் 'பெனால்டி ஏரியா'வில் வைத்து அர்ஜென்டினா வீரர் மான்டியல் கையில் பந்து பட்டது. இது 'பவுல்' என்பதால் நடுவர் 'பெனால்டி' கொடுத்தார். இந்த வாய்ப்பில் அசத்திய எம்பாப்வே(118வது நிமிடம்),'ஹாட்ரிக்' கோல் அடித்து சாதித்தார். போட்டி 3-3 என சமநிலையை எட்டியது. கூடுதலாக கோல் அடிக்கப்படாததால், வெற்றியாளரை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு போட்டி சென்றது. லாட்டரி போன்ற இதில் அதிர்ஷ்டம் அதிகம் தேவை. அர்ஜென்டினா தரப்பில் மெஸ்சி, டைபாலா, பரேதஸ், மான்டியல் கோல் அடித்தனர்.
பிரான்சின் கோமன் உதைத்த பந்தை அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் துடிப்பாக தடுத்தார். சவுமெனி 'மிஸ்' செய்தார்.
பிரான்ஸ் சார்பில் எம்பாப்வே, கோலோ முவானி மட்டும் கோல் அடித்தனர். இறுதியில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வசமாக்கியது.
இதுவே என்னுடைய கடைசி உலகக் கோப்பைப் போட்டி எனச் சில நாள்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார் மெஸ்சி. இதனால் உலகக் கோப்பைப் போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கோப்பையை வென்றதால் தனது முடிவை மாற்றியுள்ளார்.
மெஸ்சி கூறியதாவது: உலக சாம்பியனாக இன்னும் சில ஆட்டங்களில் விளையாட விரும்புகிறேன். என் வாழ்க்கையில் உலகக் கோப்பையைத் தவிர எல்லாப் போட்டிகளையும் வென்றது என் அதிர்ஷ்டம். இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினாவுக்கு எடுத்துச் சென்று அனைவர் முன்னிலையிலும் என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (34)
இறுதி ஆட்டத்திற்கு முன் உதை நிதியிடம் மெர்சி ஆசீர்வாதம் வாங்கி சென்றாரமே ? நிஜமா எசமான் ?
it is like our politicians asking for the sympathy vote as " this is my last election, please vote" :-)
இன்னும் நீ எத்தனை நாளைக்குதான் வேண்டுமென்றே இந்த பதினைந்து லட்சத்தை பிடித்து தொங்குவாய்.
நாங்க பாக்காத 15 லட்சம் வாக்குறுதியா? நாங்க கேக்காத வாக்குறுதிகளா? உங்களுக்கு இங்கே பெரிய ரசிகர் பட்டாளம் இருக்குது.
அடுத்த கால்பந்து உலக கோப்பையை ரெட் ஜெயண்ட் மூலம் உதை நிதி தான் வெளியிட வேண்டும் என்று டாடி இடம் கோரிக்கை வைத்தாராம். அதற்க்கு டாடி பார்க்காலம் என்று சொன்னாராம்.