Load Image
Advertisement

ஊழல், வளர்ச்சியின்மைக்கு எதிராக ரெட் கார்டு : பிரதமர்

 ஊழல், வளர்ச்சியின்மைக்கு எதிராக ரெட் கார்டு : பிரதமர்
ADVERTISEMENT
ஷில்லாங்: வடகிழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக வளர்ச்சியின்மை, ஊழல் மற்றும் அமைதியின்மைக்கு எதிராக 'ரெட் கார்டு' காண்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


வரும் 2023ம் ஆண்டில் கர்நாடகா, தெலுங்கானா, உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் அடங்கி உள்ளது.

Latest Tamil News

இந்நிலையில் மேற்கண்ட இரு மாநிலங்களில் வீட்டுவசதி, சாலை வசதி,விவசாயத்துறை, தொலைதொடர்புத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் ரூ.6,800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

Latest Tamil News

தொடர்ந்து, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



இதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கால்பந்து போட்டியின் போது வீரர்கள் யாரேனும் விளையாட்டு உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டால், அவர்களுக்கு 'ரெட் கார்டு' காண்பிக்கப்பட்டு, போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதே வழியில், வடகிழக்கில், கடந்த 8 ஆண்டுகளாக வளர்ச்சியின்மை, ஊழல், மற்றும் அமைதியின்மை ஆகியவற்றிற்கு 'ரெட் கார்டு' வழங்கியிருக்கிறோம்.

வடகிழக்க பகுதியில், விளையாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்கான பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலை மற்றும் 90 பெரிய விளையாட்டு திட்டபணிகள் வடகிழக்கில் நடைபெற உள்ளன.

சர்வதேச விளையாட்டு போட்டிகளை நாம் நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என நான் உங்களுக்கு உறுதியளித்து கொள்கிறேன். நமது மூவர்ண கொடியும் உயர பறக்கும். நாம், நமது சொந்த அணிக்காக உற்சாக குரல் எழுப்புவோம். இவ்வாறு மோடி பேசினார்.


வாசகர் கருத்து (12)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Is there any Red Card

  • அப்புசாமி -

    எட்டு வருஷமா அதே தேஞ்சு போன ரெகார்டு...

  • g.s,rajan - chennai ,இந்தியா

    மோடிஜி சுல்தான் "முகம்மது பின் துக்ளக்" மாதிரி இருக்கார் .

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    செளக்கியதார் ஏன் இப்படி (சீரியஸ்) விதூஷகார் ஆகி வருகிறார்? போட்டோவில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் இவர் மட்டும் ஏனிப்படி?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஆனா, மோடிஜி இப்போ இந்தியாவில் ஊழலில் பொருளாதார வளர்ச்சி அதிகமாயிடுச்சு ..ஹி..ஹி..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்