ADVERTISEMENT
புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல், சீனா மற்றும் பாகிஸ்தான் குரலில் பேசி வருகிறார் என பா.ஜ., தலைவர் நட்டா கூறியுள்ளார். ராகுலை, காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல், நிருபர்களை சந்தித்த போது கூறுகையில், ''

எல்லையில் போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால், மத்திய அரசு தூங்கி கொண்டுள்ளது. அச்சுறுத்தலை புறக்கணிப்பதுடன் அங்குள்ள சூழ்நிலையை ஒப்பு கொள்ளவும் மறுக்கிறது. அருணாச்சல் எல்லையில் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்'' , எனக்கூறினார்.

இது குறித்து பாஜ., தலைவர் நட்டா கூறுகையில், ராகுலின் கருத்துக்கு எந்தளவு கண்டனம் தெரிவித்தாலும் அது போதாது. தைரியம் மற்றும் வீரத்தின் சின்னமாக இந்திய ஆயுதப்படைகள் உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு போட்டு, சீன தூதரகம் வாயிலாக ராஜிவ் தொண்டு நிறுவனம் நிதி பெற்றுள்ளது. இதனால் தான் சீனா மற்றும் பாகிஸ்தான் குரலில் ராகுல் பேசி வருகிறார். டோக்லாமில் இந்திய வீரர்கள் போரிட்ட போது, டில்லியில் சீன தூதரக அதிகாரிகளை ராகுல் ரகசியமாக சந்தித்து பேசினார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ராகுலின் கருத்துகள் ஆச்சர்யமளிக்கவில்லை. இந்திய வீரர்கள் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய போது அவர் கேள்வி எழுப்பினார். ராகுலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ராணுவம் மீது நம்பிக்கை இல்லை ஆனால், எங்களுக்கு ராணுவம் மீது நம்பிக்கை உள்ளது. சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தும் அளவுக்கும், பதிலடி கொடுக்கும் அளவுக்கும் இந்திய ராணுவத்திற்கு திறன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., செய்தித்தொடர்பாளர் கவுராவ் பாட்டியா கூறுகையில், மல்லிகார்ஜூனா கார்கே, ரிமோன் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் தலைவர் இல்லை என்றால், எதிர்க்கட்சிகள் நாட்டுமக்களுடன் இணைந்து நிற்கும் என்றால், ராகுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். ராகுலின் கருத்து இந்தியாவை சிறுமைபடுத்துவதாகவும், ஆயுதப்படைகளின் மரபுகளை உடைப்பதாகவும் உள்ளது.
சர்ஜிக்கல் தாக்குதல் ஆகட்டும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதல் ஆகட்டும், கல்வானில் சீன வீரர்களுடன் மோதலின் போதும், ஆயுதப்படைகளை மாண்புகளை உடைக்கவே ராகுல் முயற்சிக்கிறார்.
சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய பிறகும், ராகுல் ஆதாரங்களை கேட்கிறார். கல்வான் மோதலுக்கு பிறகு பிரதமரை, '' சரண்டர் மோடி '' எனக்கூறுகிறார். தனது கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பினால் மட்டும் அவரது பாவம் போய் விடாது. இவ்வாறு அவர் கூறினார்.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், காங்., தலைவராக ராகுல் இருந்திருந்தாலும், அவரது கருத்து சிறுபிள்ளைகள் பேசுவது போல் உள்ளது. இப்போது அவர் பேசியுள்ள விதம் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் செயல். இந்த உலகமே இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை வியந்து போது, ராகுல் அதன் நம்பகத்தன்மைக்கு கேள்விக்கு உள்ளாகுகிறார்.
இது முதல் முறையல்ல. அவர் முன்னரும் ஒருமுறை இந்திய ராணுவத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். டோக்லாமில் சீனப் படைகள் ஊடுருவியபோதும் ராகுல் இவ்வாறு பேசியிருக்கிறார். டோக்லாம் ஊடுருவலின்போது, ராகுல் சீன தூதரை சந்தித்தார்.
அது எதற்காக சந்தித்தார் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் அப்போது செய்தது தேச விரோத செயல் ஆகும். ராகுலின் பேச்சை எந்த ஒரு இந்தியரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆகையால் தனது பேச்சுக்காக, ராணுவத்திடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (19)
ராகுலுக்கு ஆட்டிசம் உள்ளது. இவங்களை எல்லாம் பொருட்படுத்தவே வேண்டாம்.
காந்தி, நேரு காலத்திலிருந்தே காங்கிரஸ் என்ற கட்சி வெளிநாட்டு தானே, பிறகு எப்படி ராகுல் மட்டும் விதிவிலக்கு? நமது நாட்டையே அடகு வைத்தவர்கள் தானே இவர்களது ஆட்சியில், இவர்களை நாடு கடத்தவேண்டும்.
தேச துரோக வழக்கை போடலாம்
நீக்காதீங்க நீக்காதீங்க பல்புவை கட்சியவிட்டு நீக்காதீங்க. பல்புதான் காங்கிரசையே நீக்க அரும்பாடு படறாரு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கம்பெனி அரசியல் நடத்தும் கட்சியிலிருந்து இப்படிபட்ட கருத்துக்கள்தான் வரும்.....தங்களது தோல்விகளை மறைக்க இப்படிபட்ட அவதூறான பிரச்சாரம் விமர்சனங்களைதான் செய்ய வேண்டும்....