Load Image
Advertisement

மூதாட்டியை ஓசி என பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

  மூதாட்டியை ஓசி என பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
ADVERTISEMENT
தஞ்சாவூர் : தஞ்சாவூரில், அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியை, தரக்குறைவாக பேசிய பஸ் கண்டக்டர், நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

தஞ்சாவூர், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மெலட்டூர் வழியாக திருக்கருக்காவூருக்கு, அரசு டவுன் பஸ் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு புறப்பட்டது. 70 வயது மூதாட்டி மெலட்டூர் பஸ் ஸ்டாப்பில் ஏறினார்.

திருக்கருக்காவூருக்கு சென்றதும், அந்த மூதாட்டி பஸ்சில் இருந்து இறங்கினார். பின், தஞ்சாவூர் செல்வதற்காக பஸ் புறப்பட்ட போது, அதே மூதாட்டி மீண்டும் பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

அப்போது, அந்த மூதாட்டியிடம், 'ஓசின்னா போயிட்டு போயிட்டு வருவியா?' என கண்டக்டர் கேட்டார். அதற்கு, 'ஓசினு நான் போகல தம்பி; ஏன் இப்படி கோபமா பேசுறே' என்று மூதாட்டி பரிதாபமாக கேட்டார்.

பஸ்சில் இருந்த பயணி ஒருவர், இந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் வைரலாக்கினார்.

இதையடுத்து, தமிழக அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் ஜெபராஜ் நவமணி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, கண்டக்டர் ரமேஷ்குமார், 43, என்பவரை, சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (8)

  • Girija - Chennai,இந்தியா

    சீட்டை விட்டு எழுந்திருப்பதும் இல்லை .

  • Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ

    அப்போ பொன்முடி எப்போ சஸ்பெண்ட் ஆவார்?

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    ஸ்டாலின் ஏன் பொன்முடியை இன்னும் டிஸ்மிஸ் பண்ணவில்லை? கவ்னர் ஏன் அதைக் கோரவில்லை? சட்டம் எல்லாருக்கும் சமம் இல்லை. அண்ணல் வால்க.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    இதையே சொன்ன அமைச்சருக்கு ஏன் அரசு தண்டனை வழங்கப் படவில்லை. ஒரு போக்குவரத்து கழக துறை அதிகாரிக்கு இருக்கும் துணிவு ஏன் ஆளும் கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்.....

  • Vijay - Chennai,இந்தியா

    அமைச்சர் பேசினால் கிண்டலாக பேசினர் என்று சொல்வது தவறு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement