ADVERTISEMENT
சென்னை: பயங்கரவாத தாக்குதலுக்கு, மதுரையில் ஆயுத பயிற்சி அளித்து வந்த, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு, பிரிவினைவாத கருத்துக்களை பரப்புவதாகவும், இதன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி திரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், செப்.,22ல், தமிழகம் உட்பட, 15 மாநிலங்களில், பி.எப்.ஐ., நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதன் பின், பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

மதுரை, நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த, பி.எப்.ஐ., அமைப்பு நிர்வாகியான, ஆட்டோ ஓட்டுனர் உமர் ஷெரீப், 43, வீட்டில், கத்தி, அரிவாள், வாள், சுருள் கத்திகள் என, பயங்கரவாத ஆயுதங்களை கைப்பற்றினர்.
விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, உமர் ஷெரீப்புக்கு, 'சம்மன்' அனுப்பினர். சென்னையில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் ஆஜரான உமர் ஷெரீப்பை, மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு தயார் படுத்தியதும், ஆயுத பயிற்சி அளித்து வந்ததையும், அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, உமர் ஷெரீப் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர், 10வது நபர் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (21)
இந்த செய்தியை பார்த்தும் சீமான் மொத்த தீவிரவாத கூட்டமும் RSS என்பார் முதலில் சீமான் திருமா போன்றவர்களை கண்டு கொள்ளலாமல் இருப்பது மிகப்பெரிய தவறு கைதானவர்களை நன்கு விசாரிக்க வேண்டும்.
தீவிர வாத இயக்கங்கலில் பயிற்சி பெறுபவர்களுக்கு காலையில், இரவு உணவு கொடுத்தவர்களின் கைது எப்போது.....
அப்போ RSS பயிற்சி முகாமில் சொல்லி கொடுப்பது என்ன..... RSS ஒரு பயங்கரவாத நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான மற்றும் தடை செயப்பட வேண்டிய இயக்கம்.
தனித் தமிழ் நாடு கேட்பவர் முதல் இந்த இயக்கத்தை ஆதரிப்பவர்கள் வரை அனைவரையும் உள்ளே தனிமை சிறையில் போட வேண்டும்........ இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
மக்கள் அடிமையக்களாக இருக்கும் அவர்கள் திருந்தினால் ஒழிய தமிழ்நாடு திவிர வாத கும்பலுடன் நடப்பு வைத்திருக்கும் கூட்டத்தின் பிடியிலிருந்து வெளிவராது