Load Image
Advertisement

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்பு

 காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்பு
ADVERTISEMENT
வாரணாசி: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று (டிச.,16) நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.


சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலை பங்களிப்புடன், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி, உத்தரபிரதேச மாநிலம், காசியில், கடந்த ஒரு மாதமாக நடக்கிறது. காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Latest Tamil News
இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நவ.,19ம் தேதி துவக்கி வைத்தார். இன்றுடன் (டிச.,16) நிகழ்ச்சி முடிவடையும் நிலையில், நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
Tamil News
Tamil News
Tamil News


இந்த விழாவில், தமிழக கவர்னர் ரவி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Tamil News
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‛‛பிரதமர் நரேந்திர மோடியின் தேசபக்தி சிந்தனையால் ‛ஒரே பாரதம் உன்னத பாரதம்' உணர்வை ஒன்றிணைக்கும் விதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‛காசி தமிழ் சங்கமம்' பெருவிழாவின் நிறைவை இன்று (டிசம்பர் 16) வெகு விமரிசையாகக் கொண்டாடும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பதில் தேச மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்வோம்.'' என குறிப்பிட்டுள்ளார்.
Latest Tamil News

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காண

https://www.youtube.com/live/Z--mOvBSrEs?feature=share


வாசகர் கருத்து (5)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    ஒரே பச்சை தமிழர்கள் புகைப்படமாக இருக்கிறதே மாற்று கட்சி அல்லது கூட்டணி கட்சி என்று ஒரு தமிழருமா கிடைக்கலை பார்றா

  • hidayadullah - bangalore,இந்தியா

    அமித் ஷா என்ன .........

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    சென்னையிலே பட்டாபிஷேகம் ஒருவருக்கு காசியிலே தமிழ் சங்கமமம் நமது ஹிந்துக்களுக்கு என்ன பொருத்தமடா காசிக்கு சென்று விழாமுடியும்போது கவுரமாக அதில கலந்துகொள்ள ஓர் அமைச்சர்கூட செல்லவில்லையா

  • activeindian - Chennai,இந்தியா

    Amit shah Tamil shah. Tamilian never bend for help.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்