Load Image
Advertisement

எங்க ரூமையும் வந்து கொஞ்சம் பாருங்களேன்!: அமைச்சர்கள் கெஞ்சல்

 எங்க ரூமையும் வந்து கொஞ்சம் பாருங்களேன்!: அமைச்சர்கள் கெஞ்சல்
ADVERTISEMENT
சென்னை: உதயநிதி அறையை போன்று, தங்களது அறைகளையும் புதுப்பித்து, நவீன வசதிகளை ஏற்படுத்தி தருமாறு, மற்ற அமைச்சர்களும் கோரிக்கை விடத் துவங்கியுள்ளனர்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில், தலைமைச் செயலகம் மட்டுமின்றி, அமைச்சர்களுக்கான அலுவலகங்களும் உள்ளன. தி.மு.க., அரசு பொறுப்பேற்றபோது, கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இருந்தது. இதனால், அமைச்சர்களின் அறைகளில், பெரிய அளவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஏற்கனவே உள்ள வசதிகளுடன், அறைகளை அமைச்சர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறை, 'ஏசி' உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு, 1,000 சதுரடியில் புதிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. Latest Tamil News இங்கு, படுக்கை வசதி, வி.ஐ.பி.,க்களை சந்திக்க தனி அறை, உணவருந்தும் பகுதி, நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், இரண்டு டன் திறன் உள்ள ஆறு 'ஏசி' மற்றும் 83 அங்குல திரை உள்ள 'ஸ்மார்ட் டிவி' வைக்கப்பட்டு உள்ளன. இந்த வசதிகளை செய்வதற்கு மட்டும், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

இந்த அறையில், நேற்று முன்தினம் உதயநிதி பொறுப்பேற்றார். அப்போது, மூத்த அமைச்சர்கள் சிலர், ஆர்வத்துடன் அந்த அறையை சுற்றி பார்த்தனர். அதில் இருக்கும் வசதிகளை பார்த்ததும், தங்களுக்கும் இதுபோன்ற வசதிகளுடன் அறையை புனரமைத்து தர வேண்டும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில், சில அமைச்சர்களுக்கு கூடுதலாக துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எனவே, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு, கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


வாசகர் கருத்து (19)

  • lana -

    எல்லா அ மிக்சர் களும் மக்களின் குறைகளை அவர்கள் இருக்கும் இடத்தில் வந்து பாருங்கள். நல்ல சாலை பள்ளி மருத்துவ மனை ration கடை என்று எதுவும் கிடையாது. ஆனால் வரி மற்றும் அரசு வசூல் மட்டும் சற்றும் குறையவில்லை. மக்களின் அன்றாட வாழ்வில் எந்த வசதியும் இல்லை. பாதி பேர் தூங்க வீடு இல்லை. இவனுங்க வேல செய்யிற இடத்தில் தூங்க வசதி. அப்படி என்னதான் வேலை செஞ்சு கலட்டி கழிக்கிறார் கள்

  • lana -

    எல்லா அ மிக்சர் களும் மக்களின் குறைகளை அவர்கள் இருக்கும் இடத்தில் வந்து பாருங்கள். நல்ல சாலை பள்ளி மருத்துவ மனை ration கடை என்று எதுவும் கிடையாது. ஆனால் வரி மற்றும் அரசு வசூல் மட்டும் சற்றும் குறையவில்லை. மக்களின் அன்றாட வாழ்வில் எந்த வசதியும் இல்லை. பாதி பேர் தூங்க வீடு இல்லை. இவனுங்க வேல செய்யிற இடத்தில் தூங்க வசதி. அப்படி என்னதான் வேலை செஞ்சு கழிக்கிறார்கள்

  • raja - Cotonou,பெனின்

    அலிபாபாவின் முதல் திருடன் விடியல் குகையை திறக்க மந்திரம் சொல்வதாலும் நாற்பதாவது திருடன் சின்னவன் குகையை மூட மந்திரம் கூறுவதாலும் அவர்களுக்குத்தான் இந்த வசதிகள்.. மற்றவர்களுக்கு திருட மட்டுமே உரிமை...அதிலும் குடும்பத்துக்குகான பங்கு சரியா கொடுத்திடனும்....

  • duruvasar - indraprastham,இந்தியா

    மற்ற அமைச்சர்களும் எங்களுக்கும் வசதிகளை கூட்டிக்கொடுங்கள் என தங்கள் தேவையை வெளிப்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை

  • Kumar - Madurai,இந்தியா

    கூப்புல போய்தான் மற்ற அமைச்சர்கள் எல்லாம் உட்கார வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்