Load Image
Advertisement

ரயிலில் வேலுண்டு வினையில்லை பாடல் பாடி அசத்திய இசைக் குழந்தை சூர்ய நாராயணன்!

Tamil News
ADVERTISEMENT
சூர்ய நாராயணன் என்றால் பலருக்கு தெரிந்திருக்காது. கோவிலில் மனமுருகி திருவருட்பா பாடிய குழந்தை என்றால் சூர்ய நாராயணனின் வைரல் வீடியோ பலருக்கும் நினைவுக்கு வரும். கர்நாடக சங்கீதம் பயின்று பக்தி பாடல்களை பாடி வரும் சூர்ய நாராயணன், சமீபத்தில் ரயிலில் செல்கையில், பயணிகள் அவரை அடையாளம் கண்டு ஒரு பாடல் பாடும் படி கேட்க, 'வேலுண்டு வினையில்லை' என்ற பாடல் பாடி கம்பார்ட்மென்டையே பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சென்னை போரூரைச் சேர்ந்த சூர்ய நாராயணனுக்கு வயது 9. நான்காம் வகுப்பு படிக்கும் இவர், ஒன்றாம் வகுப்பிலிருந்தே பாட்டு பாட கற்று வருகிறார். கர்நாடக சங்கீகதத்தில் பல பிரிவுகளை முடித்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதாரர் பாடுவதை கேட்டு ஆர்வம் ஏற்பட்டு, தானும் பாட்டுக் கற்றுக்கொள்ள விரும்பியுள்ளார். இவரை நெய்வேலி சந்தானகோபலனிடம் சேர்த்து பாடல் கற்றுத் தந்து வருகிறார் இவரது தந்தை. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கோயில் பிரகாரத்தில் பக்தியுடன் நின்று கொண்டு வள்ளலார் இயற்றிய திருவருட்பாவில் இருந்து, பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்... நமச்சிவாயத்தை நான் மறவேனே என கனீர் குரலில் இச்சிறுவன் பாடிய வீடியோ இணையத்தை கலக்கியது.
Latest Tamil News கோவிட் சமயத்தில் பள்ளிகள் இயங்காததால், வீட்டில் கிடைக்கும் அதிகப்படியான நேரத்தை பயனுள்ளதாக்க பாடல் பாடி யுடியூப்களில் பதிவேற்றத் தொடங்கியுள்ளார் சூர்ய நாராயணன். அதில் திருவருட்பா வீடியோ வைரலாகி அவரது சந்தாதாரர்கள் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்துக்கு உயர்த்தியது. அய்யப்பன் பாடல், சிவன் பாடல், முருகன் பாடல் என சகல கடவுளர்களின் பக்தி பாடல்களையும் ஸ்ருதி மாறாமல் இந்த வயதிலேயே பாடுகின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் தனது தந்தையுடன் ரயிலில் பயணித்த சூர்ய நாராயணனை அடையாளம் கண்டு ஏதேனும் ஒரு பாடல் பாடும் படி கேட்டிருக்கின்றனர் சக பயணிகள். உடனே 'வேலுண்டு வினையில்லை' என்ற முருகன் பாடலை உற்சாகமாக பாடியுள்ளான். அதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்ற வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் கலக்கி வருகிறது. சூர்ய நாராயணனின் திறமைக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

சிறுவனின் வீடியோ இந்த இணைப்பில்: https://youtu.be/EjmHajQPyCQ


வாசகர் கருத்து (5)

  • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

    வாழ்க வளமுடன்

  • Dharma - Madurai,இந்தியா

    CHILD PRODIGY. இவரது பாடல்களை கேட்டு உள்ளம் உருகியிருக்கேன். வாழ்த்துகள்.

  • Ramanatham Balaji - Chennai,இந்தியா

    Pls appreciate his talent whether it is drama, tv serial or cinema. He is child prodigy no doubt

  • Narayanan K -

    Think this Train song is stage managed .Drama

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement